ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. காதலர் விக்கி பிறந்தநாளை நயன் எப்டி கொண்டாடி இருக்கார் பாருங்க!

விக்னேஷ் சிவன் பிறந்தநாளை கேக் வெட்டி நயன்தாரா கொண்டாடியுள்ளார்.

Recommended Video

Nayanthara Surprise Vignesh Shivan with Birthday party | காதலனுக்கு பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா

சென்னை: இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாளை நயன்தாராவுடன் கேக் வெட்டிக்கொண்டாடினார்.

சிம்பு, வரலட்சுமி நடித்த போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன் பிறகு நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Vigneh Shivan celebrated his birthday with actress Nayanthara

இதனிடையே தனது காதலி நயன்தாராவுக்காக ரவுடி பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, நெற்றிக்கண் எனும் படத்தை தயாரிக்கிறார். இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இப்படத்தை இயக்குகிறார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அவர் தனது காதலி நயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். உடன் அனிருத் உள்ளிட்ட நண்பர்கள் இருக்கிறார்கள். இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

அந்தப் புகைப்படத்தில் நயனைப் போலவே கேக்கும் மிக அழகாக இருக்கிறது. கருப்பு நிற சேலையில் நயன் இருக்கிறார். அவருக்கு மேட்சாக விக்கியும் கருப்பு நிற உடையே அணிந்திருக்கிறார். பின் புறத்தில் ரோஜாப் பூக்கள் சூழ, மேஜையில் இருக்கும் கேக்கிலும் பூக்களின் ஆதிக்கமே அதிகமாக இருக்கிறது.

வித்தியாசமாக மேலே பூங்கொத்து வைத்தது போன்று அந்த கேக் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் கீழ்புறமும் பூக்களே அதிகமாக உள்ளது. இந்த கேக்கைப் பார்த்து நெட்டிசன்கள், 'தனியா எதுக்கு பொக்கே வாங்கித் தரணும்னு கேக் மேலயே தலைவி எவ்ளோ பூ வச்சிருக்காங்க. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா' என கமெண்ட் வெளியிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X