விஜய் எல்லாம் ஒரு ஹீரோவா..? விக்னேஷ் கார்த்திக் இயக்கிய.. விஜய் பர்த்டே ஸ்பெஷல் குறும்படம் !

சென்னை : ஜூன் 22 ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் தளபதி விஜய்யின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் வெகுவிமர்சையாக கொண்டாடிவரும் நிலையில் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இதில் பல ரசிகர்கள் அவர் மீது கொண்ட அளவு கடந்த அன்பால் விதவிதமான போஸ்டர்கள், வீடியோக்களை பதிவிட்டு வரும் இந்த நாளில் விஜய்யின் தீவிர ரசிகரான விஜய் டிவி புகழ் விக்னேஷ் கார்த்திக் அற்புதமான குறும்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய்யை ஒரு சில நொண்டி சாக்கு சொல்லி வெறுத்து வரும் சிலருக்கு இந்த குறும்படம் ஒரு மிகப்பெரிய சவுக்கடியாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகராகவும்

நடிகராகவும்

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் நடிகராகவும் இருந்து வருபவர் விக்னேஷ் கார்த்திக். இவர் பல்வேறு படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருவது மட்டுமல்லாமல் படங்களையும் இயக்கி உள்ளார்.

இயக்குனர்

இயக்குனர்

தொலைக்காட்சிகளில் தொடர்ந்து நடித்து வந்த இவர் முதன்முறையாக வெள்ளித்திரையில் "ஏண்டா தலையில எண்ண வைக்கல" என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். வித்தியாசமான கதாபாத்திரங்களையும் கதையையும் கொண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை.

சர்ச்சைக்குரிய

சர்ச்சைக்குரிய

இந்நிலையில் இவர் எடுத்த ஷேம்புல்லி 1, ஷேம்புல்லி 2 என்ற சர்ச்சைக்குரிய சமூக கருத்துக்களை கொண்ட குறும்படங்கள் ரசிகர்களை மிகவும் ஈர்த்து அதிக அளவில் பேசப்பட்டு வந்தது. இவ்வாறு இரண்டு வேறு வேறு கதை அம்சங்களைக் கொண்ட இவரின் இந்த இரண்டு குறும்படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இவர் இயக்கவிருக்கும் இரண்டாவது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ்

"திட்டம் இரண்டு " என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கனா என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தை தொடர்ந்து இந்தப் படத்தில் லீட் ரோலில் நடிக்கிறார். இவ்வாறு தனது திரைப்படத்திற்கான அப்டேட்களை அடிக்கடி கொடுத்து வரும் விக்னேஷ் கார்த்திக் தற்போது விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு அட்டகாசமான குறும்படத்தை எழுதி இயக்கி அது தற்போது ஆதரவையும் பெற்று வருகிறார்.

ஆரம்பிக்கிறது

ஆரம்பிக்கிறது

விக்னேஷ் கார்த்திக் மற்றும் விஜே ரம்யா சுப்பிரமணியாம் இருவர் மட்டுமே நடித்துள்ள இந்த விஜய்-ல்லாம் ஒரு ஹீரோவா..? குறும்படம் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்துள்ளது. " இருவரது வீட்டிலும் இவர்களின் திருமணத்திற்கு சம்மதித்த நிலையில், திருமணம் செய்யவிருக்கும் இவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள பேச வீடியோ காலின் மூலம் பேசுவார்கள்"என ஆரம்பிக்கிறது இந்த குறும்படம்.

சவுக்கடி

சவுக்கடி

தளபதி விஜய் தற்போது உச்ச நட்சத்திரமாக இருந்து வருவதற்கு காரணம் அவரது தந்தையின் நிழல்தான் என குருட்டுத்தனமாகவும், நொண்டி சாக்கு சொல்லியும் விஜய்யை புறக்கணிப்பவர்களுக்கு இந்த படம் ஒரு சவுக்கடி ஆக அமைந்துள்ளது.

நாமும் அப்படித்தான்

நாமும் அப்படித்தான்

என்னதான் விஜய்யின் அப்பா ஒரு இயக்குனராக இருந்தாலும் தன்னுடைய விடா முயற்சியும், கடின உழைப்பும் இல்லாமல் இவ்வளவு பெரிய இடத்தை அடைந்திருக்க முடியாது. தந்தையின் நிழலில் தான் நாம் அனைவரும் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் முன்னேறி வருகிறோம் அப்படிப்பார்த்தால் நாமும் தந்தையின் நிழலில் முன்னேறி வருபவர் என்று தானே அர்த்தம் என்ற நியாயமான வசனங்களைக் கொண்டு வெளியகியுள்ள இந்த குறும்படம் விஜய்யை நேசிக்காதவர்களையும் நேசிக்க வைக்கும்.

தளபதி விஜய்யாக

தளபதி விஜய்யாக

நீயெல்லாம் ஒரு ஹீரோவா என்று பலராலும் அவமானப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்ட ஒருவர் தன்னுடைய விடாமுயற்சியாலும், அவமானங்களை ஏணிப்படிகளாக உருவாக்கி தற்பொழுது மிக உயர்ந்த இடத்திற்கு தளபதி விஜய்-யாக உயர்ந்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளங்களை வைத்து இன்று மின்னுகிறார். இவ்வாறு தன்னைத் தானே செதுக்கி தங்க தமிழனாய் உயர்ந்து இருக்கும் விஜய்யின் ரசிகர்களுக்கு இந்த குறும்படமும், அதில் வரும் வசனங்களும் மிகப்பெரிய கூஸ்பம்ஸ் ஆக இருக்கும் என்பதில் எந்த ஓரு சந்தேகமும் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X