விக்னேஷ்- தேவிகா நடிக்கும் பூனை (புலியாக மாறிய கதை)!
விக்ரமாதித்யன் மாதிரி எவ்வளவோ முயன்றும் சினிமா எனும் வேதாளத்தை கட்டியாள முடியாத விக்னேஷ், மீண்டும் ஹீரோவாகக் களமிறங்கியுள்ளார்.
படத்துக்கு பூனை (புலியாக மாறிய கதை) என தலைப்பிட்டுள்ளனர்.
காயன்ஸ் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக வி.உமாமகேஸ்வரி தயாரிக்கும் படம் இது.

கார்த்திக் ராஜா
சினிமா இசையுலகில் அனைத்து வகையிலும் திறமைசாலி என்று புகழப்பட்டாலும் வாய்ப்புகள் இல்லாமல், அப்பாவின் இசைக் கச்சேரிகளை ஒழுங்குபடுத்திவரும் கார்த்திக் ராஜாதான் படத்துக்கு இசையமைப்பாளர்.

விக்னேஷ்
இந்த படத்தில் விக்னேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். 'இந்த படம்தான் என்னை கலையுலகில் நல்ல நடிகனாக,நட்சத்திர அந்தஸ்தை பெற்று தரும் (எத்தனையாவது முறை இப்படி ஸ்டேட்மென்ட் விட்டிருப்பாரோ!) என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக,' விக்னேஷ் கூறியுள்ளார்.

தேவிகா - சந்திரகலா
கதாநாயகிகளாக தேவிகா மாதவன் - சந்திரகலா இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் பாவா லட்சுமணன் ,செவ்வாளை,ஆதிசிவன், சுப்புராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.
ரவி ஸ்ரீனிவாஸ் ஒளிப்பதிவு செய்கிறார். சினேகன் பாடல்களை எழுதுகிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராம்கிரிஷ் மிர்னாலி.

ராம்கிருஷ்ண மிர்னாலி
படம் பற்றி இயக்குனர் ராம்கிருஷ் மிர்ணாலி கூறுகையில், "யதார்த்தமான படமாக "பூனை" (புலியாக மாறிய கதை) உருவாகிறது. ஒருவன் தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கிற வேளையில் ஒரு குற்றவாளியாக் தண்டனை பெறுகிறான். ஜெயிலிருந்து தப்பி வருகிற அவன் சந்திக்கிற சம்பவங்கள் திகிலூட்டும் விதமாக உருவாக்கப் பட்டுள்ளது.
படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றுள்ளது.
தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது என்றார்.


Click it and Unblock the Notifications











