அவன் அவள்.... இந்தப் படத்திலாவது தேறுவாரா விக்னேஷ்?

By Shankar

விக்னேஷ்... அறிமுகமான ஆண்டிலிருந்து இன்னும் அப்படியே இருக்கும் நாயகர்களில் ஒருவர் விக்னேஷ்.

அவரைக் குறை சொல்லி ஒன்றுமில்லை. அவர் சிறப்பாகவே நடித்தாலும், அந்தப் படங்கள் பெரிய ரேஞ்சுக்குப் போகாததால் இன்னும் தனக்கென ஒரு திருப்புமுனைப் படத்துக்காகக் காத்திருப்பவர்.

அவன் அவள்

அவன் அவள்

இப்போது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘அவன் அவள்' என பெயரிடப்பட்டுள்ளனர்.

தேவிகா மாதவன்

தேவிகா மாதவன்

இதில் தேவிகா மாதவன், சந்திரிகா என்னும் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். மேலும் கணபதி, ஸ்வப்னம், சச்சு, பாவாலட்சுமணன், செவ்வாளை, ஆதிசிவன் சுப்புராஜ், சின்ராசு, மணிகுட்டி, என்.சி.பி.விஜயன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கார்த்திக் ராஜா

கார்த்திக் ராஜா

கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். ரவி சீனிவாசன் ஒளிப்பதிவை செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராம்கிரீஷ் மிரினாளி இயக்குகிறார். இப்படத்தை காயன்ஸ் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக வி.உமாமகேஸ்வரி, வி.சுதா விஸ்வநாதன் தயாரிக்கின்றனர்.

குற்றம்

குற்றம்

இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில், "குற்றம் ஒன்றை செய்துவிட்டு போலீஸிடம் இருந்து தப்பிக்க அடர்ந்த காட்டிற்குள் அடைக்கலமாகிறான் ஒருவன். காட்டில் பெரிய பங்களா ஒன்றில் உள்ள ஒரு பெண்ணுடன் பழக்கமாகிறது. அந்த பழக்கம் காதலாக மாறி திருமணமும் செய்கிறான்.

காணாமல் போகும் நாயகி

காணாமல் போகும் நாயகி

இருவருக்கும் உடல் ரீதியான நெருக்கமும் உண்டாகிறது. அதற்கு பிறகு அவள் காணாமல் போகிறாள். யார் அவள் என்ற திகில் கேள்விக்கு விடைதான் ‘அவன் அவள்' படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை. இப்படத்தின் கதை பயங்கர திகிலாக இருக்கும்.

கொடைக்கானல் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்படம் விக்னேஷுக்கு இது ஒரு திருப்புமுனை படமாக இருக்கும்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X