நயன்தாரா பற்றி விக்னேஷ் சிவன்… யாராலும் அவர் மனதை மாற்ற முடியாது
சென்னை : காத்துவாக்குல 2 காதல் படத்தின் பிரமோஷன் வேலைகள் துவங்கி பரபரப்பாக போய்க்கொண்டிருக்க, படத்தில் நடித்த விஜய் சேதுபதி மற்றும் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் பல தனியார் சேனல்களுக்கு இன்டர்வியூ தந்து வருகின்றனர்.
காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா நடித்துள்ளனர்.
சமீபத்தில் விக்னேஷ் சிவன் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் நயன்தாரா பற்றிய கேள்விக்கு மிக இயல்பாக பதிலளித்துள்ளார்.

எதிர்பார்ப்பில் காத்துவாக்குல இரண்டு காதல்
தானா சேர்ந்த கூட்டம் படத்திற்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கும் படம் காத்துவாக்குல 2 காதல். நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியுடன் இணையும் இரண்டாவது படம். கதாநாயகியாக நயன்தாரா மற்றும் சமந்தா நடித்துள்ளனர். படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரிலீசாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. அதேபோல படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி மேலும் ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முக்கோண காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

சமந்தாவின் வருகை
நடிகை சமந்தா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நேரடியாக நடிக்கும் படம் காத்துவாக்குல இரண்டு காதல். விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம். படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நயன்தாரா நடிக்க இந்த படத்தின் டப்பிங்கை சமீபத்தில் பேசி முடித்துள்ளார் சமந்தா. அதைக் குறித்து தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு " டப்பிங் முடிந்தது. இதை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன். அற்புதமான மனிதர்கள் மத்தியில் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது " என பதிவிட்டிருக்கிறார். கடந்த ஆண்டின் இறுதியில் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய சமந்தா ஒட்டுமொத்த ரசிகர்களை மெய்மறக்கச் செய்தார். தற்போது முழு நீள படமாக வந்து ரசிகர்களை மகிழ்விப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரமாண்ட ரிலீஸ்
காத்துவாக்குல ரெண்டும் காதல் படத்தின் திரையரங்க ரிலீஸ் உரிமையை கையகப் படுத்தியுள்ளது ரெட் ஜெயின்ட் மூவிஸ். விக்னேஷ் சிவன் இதற்கு முன்னர் இயக்கிய நானும் ரவுடிதான் கூட்டணி இதிலும் தொடர்வதால் இந்த படமும் நிச்சயம் மாபெரும் வெற்றி பெறும் என சொல்லப்படுகிறது. படத்தின் டீஸர், டிரைலர், பாடல்கள் அதை உறுதி செய்துள்ளது. படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கதிர் மற்றும் விஜய் கார்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். செவன் ஸ்கிரீன் பிக்சர்ஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து வழங்கும் இப்படத்தை தயாரிப்பாளர் லலித் தயாரித்துள்ளார். ஏப்ரல் மாதத்தில் வேறு எந்த பெரிய திரைப்படமும் இல்லாததால் காத்துவாக்குல இரண்டு காதல் படம் மிகப்பெரிய அளவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது

நயன்தாரா பற்றி விக்னேஷ்
காத்துவாக்குல 2 காதல் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்குவதால் விக்னேஷ் சிவன் மற்றும் விஜய் சேதுபதி தொடர்ந்து தனியார் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர். அதில் படத்தைப் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும்போது " சினிமாவைப் பற்றி நயன்தாராவுடன் நான் விவாதிப்பதில்லை. அவர் விருப்பப்படி தான் படங்களில் நடிப்பார். நாம் அவரை கட்டாயப்படுத்த முடியாது. உலகிலேயே சிறந்த ஐஸ் கிரீம் ஆக இருந்தாலும் நாம் அவரை வலுக்கட்டாயமாக சாப்பிட வைக்க முடியாது. அவங்க ரொம்ப க்ளியர். ரொம்ப ஸ்ட்ராங் " என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிலைக் கேட்டதும் அருகிலிருந்த விஜய் சேதுபதி " அழகா சொல்லிட்டீங்க போங்க " என அவரை பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











