Just In
- 8 hrs ago
குட்டை உடையில் தொடை தெரிய போஸ்..கவர்ச்சி விருந்தளிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் !
- 8 hrs ago
அட இது என்ன ஃபேஷன்...இதுவும் நல்லத்தான் இருக்கு.. கலக்குங்க சமந்தா !
- 9 hrs ago
கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்!
- 10 hrs ago
கவர்ச்சி காட்டி ரசிகர்களை கதறவிடும் காட்டேரி பட நடிகை!
Don't Miss!
- Automobiles
எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரில் புதிய விலைமிக்க வேரியண்ட்!! இவ்வளவு வசதிகள் புதியதாக வழங்கப்பட்டுள்ளதா?!
- News
பிடன் போட்ட முதல் கையெழுத்து.. முஸ்லிம்கள், பருவ நிலை, சுவர், குப்பைக்கு போன டிரம்பின் கொள்கைகள்! .
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 21.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்கக்கூடாது…
- Sports
கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்!
- Finance
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பாட்டில் மூடியை இப்படியும் திறக்கலாம்: பலே வீடியோ வெளியிட்ட விக்னேஷ் சிவன்
சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் பாட்டில் மூடி சேலஞ்சை ஏற்றுக் கொண்டு வித்தியாசமாக செய்துள்ளார்.
பாட்டில் மூடி சேலஞ்சை(#bottlecapchallenge) ஏற்று பிரபலங்கள் அது குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், நம்ம ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஆகியோர் பேக் கிக் மூலம் பாட்டில் மூடியை அம்சமாக திறந்தபோது எடுத்த வீடியோவை வெளியிட்டனர்.

இந்நிலையில் நம்ம அன்பான இயக்குநர் விக்னேஷ் சிவனும் பாட்டில் மூடி சேலஞ்சை ஏற்று இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பாட்டில் மூடியை காலால் எட்டி உதைத்து திறக்க பல முறை முயன்றும் முடியவில்லை.
6 மணிக்கு டிவிட்டர் அலறும்.. பேஸ்புக் கதறும்.. யூட்யூப் மலரும்.. என்னவா இருக்கும்? மரண வெய்ட்டிங்!
விக்னேஷ் சிவனால் பேக் கிக் செய்ய முடியவில்லை. அவருக்கு பாட்டில் எட்டவில்லை. இதையடுத்து அவர் தனது கையால் பாட்டில் மூடியை திறந்துவிட்டார். காலால் திறக்க முயன்றும் முடியாததால் அவர் கடுப்பாகாமல் ஜாலியாக சிரித்துள்ளார். அது தான் விக்கி. எதையும் பாசிட்டிவாக எடுத்துக் கொள்வார்.
காலால் திறக்க முடியவில்லை என்றால் என்ன, கையால் திறந்துவிட்டுப் போவோமே என்று புது வழி கண்டுபிடித்துள்ளார் விக்கி. இந்த பாட்டில் மூடி சேலஞ்சில் தோல்வி அடைந்தால் உலகம் அழிந்துவிடாது என்பது அன்பான இயக்குநருக்கு தெரிந்துள்ளது.
தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயனை வைத்து படம் ஒன்றை எடுக்க உள்ளார். அந்த படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். சிவகார்த்திகேயனும், நயன்தாராவும் இரண்டு படங்களில் ஜோடியாக நடித்த நிலையில் இந்த படம் எடுக்கப்படுகிறது.
விக்னேஷ் சிவன் தனது காதலியான நயன்தாராவை இந்த ஆண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம். ரசிகர்களின் விருப்பதை விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் நிறைவேற்றி வைப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்நிலையில் சூர்யாவை வைத்து மீண்டும் ஒரு மாஸ் படத்தை இயக்குமாறு அவரின் ரசிகர்கள் விக்னேஷ் சிவனிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் என்.ஜி.கே. படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்குமாறும் செல்வராகவனிடம் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.