கோவா டூர் ஓவர்.. தனி விமானத்தில் சென்னை திரும்பிய நயன்தாரா, விக்னேஷ் சிவன்.. வைரலாகும் போட்டோஸ்!

By

சென்னை: கோவா சென்றிருந்த நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தனி விமானத்தில் சென்னை திரும்பிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் சில வருடங்களாகக் காதலித்து வருகின்றனர்.

'நானும் ரவுடிதான்' படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் ஒன்றாக வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாரா

இவர்கள் பல்வேறு கோயில்களுக்கு சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பின்போது இருவரும் சில கோயில்களுக்கு சென்று வந்தனர். அது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்திருந்தனர்.
லாக்டவுனில் நயன்தாரா பற்றிய செய்தி அவ்வப்போது பரபரப்பை கிளப்பியது.

ஜோசியர் ஆலோசனை

ஜோசியர் ஆலோசனை

நயன்தாராவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அதற்காக சிகிச்சைப் பெற்று வருவதாகவும் செய்தி பரவியது. இதை விக்னேஷ் சிவன் மறுத்து காட்டமாகப் பதிலளித்து இருந்தார். பின்னர் ஜோசியர் ஆலோசனைப்படி திருநாகேஸ்வரம் கோயிலுக்குச் செல்ல இருப்பதாகவும் அதற்கு பிறகு திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

நோக்கங்கள் இருக்கு

நோக்கங்கள் இருக்கு

இந்நிலையில் விக்னேஷ் சிவன், இணையதளத்தில் எங்களுக்கு 22 முறை திருமணம் பண்ணி வச்சுட்டாங்க. மூனு மாதத்துக்கு ஒரு முறை எங்களுக்குத் திருமணம் பண்ணி வச்சிருவாங்க. எங்களுக்குன்னு சில நோக்கங்கள் இருக்கு. அதை முடிச்சுட்டுதான் சொந்த வாழ்க்கைக்கு வரணும்னு நினைக்கிறோம் என்று கூறியிருந்தார்.

தனி விமானப் பயணம்

தனி விமானப் பயணம்

இதற்கிடையே ஓணம் பண்டிகையை கொண்டாட கேரளாவுக்கு தனி விமானத்தில் இருவரும் சென்றனர். காதலர் விக்னேஷ் சிவனுடன் கொச்சி விமான நிலையத்தில் தனி விமானத்தில் வந்து நயன்தாரா ஹாலிவுட் நடிகை சாயலில் இறங்கி வரும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாயின.

அம்மாவின் பிறந்தநாள்

அம்மாவின் பிறந்தநாள்

இதையடுத்து இருவரும் வெக்கேஷனுக்காக கோவா சென்றனர். அங்குள்ள ரெசார்ட் ஒன்றில் அவர்கள் தங்கியிருந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். இந்நிலையில் நயன்தாரா அம்மாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டிருந்தார்.

Recommended Video

Nayanthara Villain Anurag Meetoo case • Payal Gosh | Filmibeat Tamil
சென்னைத் திரும்பினர்

சென்னைத் திரும்பினர்

இந்நிலையில் கோவாவில் இருந்து இருவரும் நேற்று சென்னைத் திரும்பினர். இருவரும் தனி விமானத்தில், இருந்து இறங்கி வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. நடிகை நயன்தாரா, அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் சமந்தாவும் நடிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X