சர்வதேச பட விழா.. பட்டுப்புடவையில் நயன்தாரா.. வேட்டி சட்டையில் விக்னேஷ் சிவன்.. வைரல் போட்டோஸ்!
சென்னை: ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் புடவை, வேஷ்டியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகின்றனர்.
தற்போது ஒன்றாக வசித்து வரும் இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நோக்கங்கள் இருக்கு
விக்னேஷ் சிவன் அளித்த பேட்டி ஒன்றில், இணையதளத்தில் எங்களுக்கு 22 முறை திருமணம் பண்ணி வச்சுட்டாங்க. மூனு மாதத்துக்கு ஒரு முறை எங்களுக்குத் திருமணம் பண்ணி வச்சிருவாங்க. எங்களுக்குன்னு சில நோக்கங்கள் இருக்கு. அதை முடிச்சுட்டுதான் சொந்த வாழ்க்கைக்கு வரணும்னு நினைக்கிறோம் என்று கூறியிருந்தார்.

ரவுடி பிக்சர்ஸ்
இதற்கிடையே விக்னேஷ் சிவன், ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் மூலம் நயன்தாரா, பார்வையற்றவராக நடிக்கும் நெற்றிக்கண் படத்தை தயாரித்து வருகிறார். அடுத்ததாக காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை லலித்குமாருடன் இணைந்து தயாரித்துவரும் விக்னேஷ் சிவன், படங்களை வெளியிடவும் முடிவு செய்துள்ளனர்.

தாக்கம் ஆழமானது
அதன்படி அருண் மாதேஸ்வரனின் ராக்கி படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளார்.
இதற்கிடையே அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ள கூழாங்கல் என்ற படத்தையும் வாங்கியுள்ளார். 'கூழாங்கல் வினோத்ராஜின் முதல் படம் என்றாலும் தலைப்பை போலவே எளிமையாக இருந்தாலும் அது எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது' என்று நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கூறியிருந்தனர்.

ரோட்டர்டாம் பட விழா
இந்நிலையில், நெதர்லாந்து நாட்டில் நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் டைகர் பிரிவில் போட்டியிட இந்தப் படம் தேர்வானது. இந்தியாவிலிருந்து தேர்வான ஒரே படம் கூழாங்கல் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து படக்குழுவுடன் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் அங்கு சென்றுள்ளனர்.

வேஷ்டி, புடவை
பட விழாவில் படக்குழுவுடன் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வேஷ்டி, புடவையில் கலந்துகொண்டனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நடிகை நயன்தாரா, இப்போது விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் ரஜினியின் அண்ணாத்த படங்களில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











