வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைக்கு தாயான நயன்தாரா..காரணம் தெரியாமல் புலம்பும் நெட்டிசன்ஸ்!

சென்னை : சினிமா நட்சத்திர தம்பதியர்களான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியர் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆகி உள்ளனர்.

இந்த செய்தி சோஷியல் மீடியாவில் பரவியதை அடுத்து நேற்று முதல் இந்த செய்திதான் ஹாட் டாப்பிக்காக உள்ளது.

பலர் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறினாலும், சிலர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள காரணம் தெரியாமல் இணையத்தில் புலம்பி வருகின்றனர்.

நயன்தாரா

நயன்தாரா

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு அற்புதமான நடிகை என்றால் அது நயன்தாராதான். அழகும், திறமையும் இருந்ததால் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே மக்கள் மனத்தில் இடம் பிடித்து லேடிசூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றார். தமிழ், தெலுங்கு, மலையாளம்,இந்தி என அனைத்து மொழிபடங்களிலும் தற்போது வரை டாப் ஹீரோயின் இவர்தான்.

ஒரே வீட்டில்

ஒரே வீட்டில்

இவர் குறித்து பல கிசுகிசுக்கள் வந்தாலும், அவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் நயன்தாரா. நானும் ரௌடிதான் படத்தில் நடித்த போது இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்து இருவரும், 6 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

தடபுடலான திருமணம்

தடபுடலான திருமணம்

இதையடுத்து கடந்த ஜூன் 9ந் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திரைத்துறையே வியந்து போகும் அளவுக்கு மிரட்டலாக திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான்,விஜய் சேதுபதி, அஜித்தின் மனைவி ஷாலினி, அனிருத்,சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.ரகுமான் என பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அம்மா & அப்பா ஆகிவிட்டோம்

அம்மா & அப்பா ஆகிவிட்டோம்

திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்து மற்றும் பிரான்ஸ் என இரண்டு முறை ஹனிமூனை கொண்டாடிய இந்த நட்சத்திர ஜோடி இணையமே திணறும் வகையில் ஒரு தகவலை நேற்று வெளியிட்டது. அதாவது நயனும் நானும் அம்மா, அப்பா ஆகிவிட்டோம். இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. முன்னோர்களின் ஆசீர்வாதங்களும், பிரார்த்தனைகளும் ஒருங்கிணைந்து இரட்டை குழந்தைகளின் வடிவத்தில் எங்களுக்கு கிடைத்துள்ளன. உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் எங்களுக்கு வேண்டும் என பதிவிட்டிருந்தார்.

என்ன காரணமா இருக்கும்

என்ன காரணமா இருக்கும்

இந்த தகவல் இணையத்தில் வெளியானதை அடுத்து, நெட்டிசன்கள் பலர் வாழ்த்து தெரிவித்தாலும், திருமணமாகி 4 மாதத்திற்குள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள என்ன காரணம் என்றும், குழந்தை பிறந்தால் அழகு குறைந்துவிடும் என்பதால், வாடகைத் தாய் மூலம் தாயாவதா, பிள்ளைகளை விட அழகும், கெரியரும் முக்கியமாகிவிட்டதா என இணையவாசிகள் விளாசி வருகின்றனர்.

நயன்தாராவுக்கு ஆதரவு

நயன்தாராவுக்கு ஆதரவு

ஆனால்,நயன்தாராவின் தீவிர நலம் விரும்பிகள், நயன்தாரா குழந்தை பெற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்பது அவருடைய விருப்பம், நயன்தாராவின் உடல்நலம் மற்றும் வயதை கருத்தில் கொண்டு தான் விக்னேஷ் சிவன் வாடகைத் தாயை தேர்வு செய்திருப்பார் என ரசிகர்கள் நயன்தாராவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X