நயன்தாரா-விக்கி அடுத்தடுத்த பிளான்..திருப்பதி விசிட்.. நாளை செய்தியாளர் சந்திப்பு, ரிசப்ஷன்..

சென்னை : இயக்குநர் விக்னேஷ் சிவன் -நடிகை நயன்தாரா திருமணம் நேற்றைய தினம் நடந்து முடிந்துள்ளது.

Recommended Video

Nayanthara Wedding | திருப்பதி கல்யாண உற்சவத்தில் Wikki-Nayan *Celebrity |Filmibeat Tamil

மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ரெசார்ட்டில் ஏராளமான திரைப்பிரபலங்கள் சூழ மிகவும் சிறப்பாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கொடுக்க விக்னேஷ் சிவன் நயன்தாரா கழுத்தில் தாலி கட்டினார்.

விக்னேஷ் சிவன் -நயன்தாரா திருமணம்

விக்னேஷ் சிவன் -நயன்தாரா திருமணம்

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இவர்கள் இருவரும் திருமணம் செய்யும் முடிவையும் விக்னேஷ் சிவன் முன்னதாக அறிவித்திருந்தார். ஆனால் தேதியை குறிப்பிடாமல் மௌனம் சாதித்தார்.

சிறப்பான திருமணம்

சிறப்பான திருமணம்

இந்நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் திருமண அறிவிப்பு வெளியானது. இதை செய்தியாளர்கள் முன்னிலையில் அறிவித்த விக்னேஷ் சிவன், தொடர்ந்து அனைவரின் ஆதரவும் வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதனிடையே நேற்றைய தினம் விக்னேஷ் -நயன் திருமணம் சிறப்பான வகையில் நடந்து முடிந்துள்ளது.

திருப்பதியில் திட்டமிடப்பட்ட திருமணம்

திருப்பதியில் திட்டமிடப்பட்ட திருமணம்

முதலில் திருப்பதியில் இவர்கள் திருமணம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பின்பு பாதுகாப்பு காரணங்களுக்காக அது மாற்றப்பட்டது. மாமல்லபுரத்தில் உள்ள ரெசார்ட் ஒன்றில் இவர்களது திருமணம் மிகுந்த பாதுகாப்புடன் நேற்றைய தினம் நடைபெற்றது. போலீசார், பவுன்சர்கள் என இவர்களது திருமணம் மிகுந்த பாதுகாப்புடன் நடைபெற்றது.

திருமண புகைப்படங்கள்

திருமண புகைப்படங்கள்

திருமணம் முடிந்த சில மணிநேரங்களில் திருமணப் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். பாரம்பரியமும் புதுமையும் கலந்த வகையில் இவர்களது காஸ்ட்யூம் இருந்தது. சிவப்பு நிறத்தில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட புடவையில் நயன்தாரா ஜொலித்தார்.

திருப்பதியில் சாமி தரிசனம்

திருப்பதியில் சாமி தரிசனம்

தொடர்ந்து விக்னேஷ் சிவன், நயன்தாரா மேடம் முதல் தன்னுடைய மனைவி வரை என தனது காதலின் அடுத்தடுத்த கட்டங்களை உருக்கத்துடன் விவரித்தார். இதனிடையே திருமணம் முடிந்த கையோடு இன்றைய தினம் இந்த ஜோடி திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்யவுள்ளது.

கோயில்களுக்கு விசிட்

கோயில்களுக்கு விசிட்

திருமணத்தை திருப்பதியில் செய்ய முடிந்து சில காரணங்களால் அதை நடத்த முடியாமல் போன நிலையில், தற்போது திருமணம் முடிந்த கையோடு, திருப்பதிக்கு இந்த ஜோடி செல்லவுள்ளது. கடந்த சில மாதங்களாகவே பல கோயில்களுக்கு இவர்கள் இருவரும் ஜோடியாக சென்றுவந்தது குறிப்பிடத்தக்கது.

திரைத்துறை பிரபலங்கள்

திரைத்துறை பிரபலங்கள்

திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான், மணிரத்னம், சுஹாசினி, ஜெயம் ரவி, மோகன் ராஜா, கேஎஸ் ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன், அட்லி, திவ்யதர்ஷினி, சரத்குமார், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முக்கிய திரைத்துறை பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

நாளை ரிஷப்ஷன்

நாளை ரிஷப்ஷன்

இதனிடையே நாளைய தினம் பத்திரிகை மற்றும் மீடியாவினருக்காக ரிஷப்சன் வைக்கப்பட உள்ளதாக முன்னதாகவே விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார். நாளைய தினம் நடைபெறவுள்ள இந்த ரிஷப்ஷனில் முக்கிய பிரபலங்களும் கலந்துக் கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சிறப்பான விருந்துக்கும் நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X