செம க்யூட்டா பேசும் நயன்தாரா..நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட புதிய ப்ரோமோ.. திருமண வீடியோ விரைவில்!

சென்னை : நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண வீடியோவின் புதிய ப்ரோமோவை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

லேடி சூப்பர் என நயன்தாரா எந்த அளவுக்கு பிரபலமானாரோ அந்த அளவுக்கு காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார்.

சிம்பு, பிரபுதேவா என அடுத்தடுத்த காதல் தோல்விகளுக்குப் பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார்.

காதல் புறா

காதல் புறா

நானும் ரவுடி தான் படத்தில் பணிபுரிந்த போது விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கு நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. பொது இடங்களுக்கு ஒன்றாக செல்வது வெளியூர், வெளிநாடு என சுற்றுலாவுக்கு செல்வது, அதிக கடவுள் நம்பிக்கை கொண்ட நயன்தாராவை விக்கியுடன் கோவில்களில் அதிகமாக பார்க்க முடிந்தது. நயன் மற்றும் விக்கியின் ஜோடி பொருத்தம் ரசிகர்களுக்கும் பிடித்துப் போக, எப்போது கல்யாணம் என ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

தடபுடலான திருமணம்

தடபுடலான திருமணம்

கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு மேல் காதல் புறாவாக சுற்றி வந்த இந்த ஜோடி கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் ஒரு நட்சத்திர ஓட்டலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தில், திருத்தணி, கபாலீஸ்வரர், திருவண்ணாமலை, காளிகாம்பாள் உள்ளிட்ட கோயில்களிலிருந்து வந்த 5 புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓத ஆகம விதிப்படி திருமணம் நடைபெற்றது.

பிரபலங்கள் வாழ்த்து

பிரபலங்கள் வாழ்த்து

தடபுடலாக நடைபெற்ற இந்த திருமணத்தின் வெளியீட்டு உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருந்ததால், திருமணத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, ஜோதிகா, விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர்கள் மணிரத்னம், அட்லி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

தேவதைப்போல

தேவதைப்போல

திருமணமான உடன் நடிகர் விக்னேஷ் சிவன் திருமண புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படத்தில் நயன்தாரா சிவப்பு நிற சேலையில், தேவதைப்போல அம்சமாக இருந்தார். புகைப்படம் வெளியானதும் நயன்தாராவின் புடவையின் விலை என்ன, டிசைன் என்ன என அனைவரும் இணையத்தை ஆராயத் தொடங்கிவிட்டனர்.

புதிய ப்ரோமோ

புதிய ப்ரோமோ

திருமண புகைப்படம் ஒன்றிரண்டு மட்டுமே வெளியானதால், திருமணம் எப்படி நடந்தது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பயணம் பற்றிய ஆவணப்படம் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது என நெட்பிளிக்ஸ் ஒரு ப்ரோவை வெளியிட்டு இருந்தது. இதையடுத்து, தற்போது புதிய ப்ரோமோ வீடியோ ஒன்றை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் நயனும், விக்கியும் தங்களது காதல் வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பேசியுள்ளனர். அந்த ப்ரோமோவில் நயன்தாரா செம க்யூட்டாக பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X