ஊர் சுத்த முடியல.. கொரோனாவே போய்விடு.. வைரலாகும் நயன்தாரா விக்னேஷ் சிவன் க்யூட் போட்டோ!
சென்னை: விக்னேஷ் சிவன், நயன்தாராவின் க்யூட் போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
நீண்ட நாட்களுக்குப் பிறகு தலைவி நயன்தாராவின் தரிசனம் என ரசிகர்கள் அதனை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க நயன்தாரா தயாராகி வருகிறார்.

விக்னேஷ் சிவன் வெளியீடு
கொரோனா லாக்டவுனுக்கு முன்னதாக நியூயார்க் நகரத்தில் இருவரும் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.ஷாப்பிங் மால் ஒன்றில் நயன்தாரா காபி குடித்தபடி சிரிக்கும் அந்த செல்ஃபி புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

கொரோனா போய்விடு
மேலும், அந்த புகைப்படத்துக்கு கேப்ஷனாக சுற்றுலாக்களை ரொம்பவே மிஸ் செய்கிறோம் என்றும், இது நியூயார்க் நினைவுகள் என்றும், கொரோனா வைரஸே சீக்கிரம் இந்த உலகத்தை விட்டு போய்விடு என்றும் ரொம்ப ஃபீல் பண்ணி இயக்குநர் விக்னேஷ் சிவன் பதிவிட்டு இருப்பது பலரையும் திரும்பி பார்க்க வைக்கிறது.

தாமதமாகும் அம்மன் தரிசனம்
மூக்குத்தி அம்மனையும் இந்த கொரோனா வைரஸ் சும்மா விடவில்லை. இந்த சம்மருக்கு ரிலீசாக வேண்டிய அந்த படம், வரும் பொங்கலுக்குத் தான் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் தியேட்டர்கள் திறந்தால் தான். கீர்த்தி சுரேஷ், ஜோதிகா, வரலக்ஷ்மி சரத்குமார் போல தனது படத்தை OTTல் வெளியிட நயன்தாரா விரும்பவில்லை. ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் தியேட்டரில் தான் மூக்குத்தி அம்மன் தரிசனம் கிடைக்குமாம்.

மீண்டும் நானும் ரவுடி தான் கூட்டணி
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிய படங்களிலேயே அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் என்றால் அது நானும் ரவுடி தான். இந்நிலையில், அதே கூட்டணியுடன் மீண்டும் அவர் களமிறங்க திட்டமிட்டு, விஜய்சேதுபதி ஹீரோ நயன்தாரா மற்றும் சமந்தா ஹீரோயின் என கடந்த காதலர் தினத்துக்கு அறிவித்ததுடன் அந்த படம் நிற்கிறது. விரைவில் அதன் ஷூட்டிங் தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.

கடைசி வரை காதல் தானா?
விக்னேஷ் சிவனும் நயன்தாரவும் காதலிக்கத் தொடங்கி கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆகப்போகிறது. இந்த லாக்டவுனில் இருவரும் லிவ்வின்னில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. எப்போது தான் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற ஆர்வம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே இருந்து வருகிறது. கொரோனா காரணமாகத் தான் அதுவும் தள்ளிப் போவதாக தகவல்கள் கசிகின்றன. சீக்கிரமே நல்ல செய்தி வரும் என எதிர்ப்பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











