கையை புடி தங்கமே.... கொண்டாட்ட வீடியோ வெளியிட்ட விக்னேஷ் சிவன்

சென்னை : இயக்குநர் விக்னேஷ் சிவன் -நயன்தாரா கோலிவுட்டின் சிறப்பான ஜோடியாக காணப்படுகின்றனர்.

இவர்கள் தங்களது கேரியரையும் சொந்த வாழ்க்கைகையும் சிறப்பாக கொண்டு செல்கின்றனர்.

விரைவில் திருமணம் முடிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இவர்களை பார்க்கும்போது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடி

விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடி

விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடி கோலிவுட்டின் மிகவும் சிறப்பான ஜோடியாக காணப்படுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இணைந்து வாழும் இவர்கள் விரைவில் திருமணம் முடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. நானும் ரவுடி தான் படத்திலிருந்து இவர்களது காதல் பயணம் தொடர்கிறது.

சிறப்பான ஜோடி பொருத்தம்

சிறப்பான ஜோடி பொருத்தம்

அடுத்தடுத்த காதல் தோல்விகளால் மனமுடைந்திருந்த நயன்தாராவிற்கு சிறப்பான ஆறுதலாக அமைந்துள்ளார் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவருடைய ஜோடி பொருத்தம் அவர்களை காட்டிலும் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்து வருகிறது.

தயாரிப்பு நிறுவனம்

தயாரிப்பு நிறுவனம்

தங்களது கேரியரை சிறப்பாக அமைத்துவரும் இவர்கள், ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் துவக்கி அதன்மூலம் சிறப்பான படங்களை கொடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு சிறப்பாக அமைந்ததாக விக்னேஷ் சிவன், புத்தாண்டு வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்த வெற்றிகள்

அடுத்தடுத்த வெற்றிகள்

கடந்த ஆண்டில் நெற்றிக்கண், ராக்கி போன்ற படங்கள் சிறப்பான வெற்றியை கொடுத்துள்ள நிலையில் கூழாங்கல் படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது தங்களது நிறுவனத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டில் மகிழ்ச்சி

புத்தாண்டில் மகிழ்ச்சி

கனெக்ட் உள்ளிட்ட 4 படங்களை தங்களது நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், அடுத்ததாக தனது இயக்கத்தில் வெளியாகவுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படம் குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இந்தப் படத்தில் மெலடி பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

வீடியோ வெளியீடு

வீடியோ வெளியீடு

இந்த ஜோடி தற்போது வெளிநாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அழகான கடற்கரை பின்னணியில் தன்னுடைய காதலுக்குரிய நயன்தாராவை அழகாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

சிறப்பான கேரியர்

சிறப்பான கேரியர்

நடிகை நயன்தாரா தொடர்ந்து சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதேபோல விக்னேஷ் சிவனும் இயக்கத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இவரது காத்து வாக்குல ரெண்டு காதல் படம் விரைவில் வெளியாக உள்ளது.

வெற்றிகரமான ஜோடி

வெற்றிகரமான ஜோடி

இந்த ஜோடி வெற்றிகரமான ஜோடியாக கோலிவுட்டில் வலம் வருகிறது. ஆயினும் தங்களது கொண்டாட்டத்தையும் இவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை. அவ்வப்போது கொண்டாட்டத்தில் ஈடுபடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X