யாரு என்ன சொன்னால் என்ன?.. யப்பா செம ஹேப்பியாக இருக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவன்

சென்னை: நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். மேலும் அவர்கள் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றுக்கொண்டார்கள். அவர்களுக்கு உயிர், உலக் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. சூழல் இப்படி இருக்க சமீபமாக இரண்டு பேருமே தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி விமர்சனத்தை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் அவர்கள் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

இரண்டு காதல் தோல்விகளை சந்தித்த நயன்தாரா ஒரு கேப்புக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தார். அப்படி தனது இரண்டாவது இன்னிங்ஸில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார் அவர். இரண்டு பேரும் சில வருடங்கள் லிவிங் டூ கெதரில் இருந்துவிட்டு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு நயன்தாரா தொடர்ந்து பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

nayanthara vignesh shivan

சர்ச்சைகள்: திருமணம் ஆனபோதே அவர்கள் சர்ச்சைகளை சந்தித்தார்கள். அதாவது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட விவகாரம் பூதாகரமாக வெடித்து பின்னர் அடங்கியது. அதற்கு பிறகு பெரிதாக எதிலும் சிக்காமல் இருந்த அவர்கள்; சமீபமாக மீண்டும் சர்ச்சைகளில் சிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படி முதலில் தனுஷுடன் அவர்களுக்கு ஏற்பட்ட மோதல் பெரும் விவாதத்தை கிளப்பியது. இப்போது அந்தப் பிரச்னை நீதிமன்றத்தில் வழக்காக இருப்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டியில் சர்ச்சை: அதேபோல் சமீபத்தில் தனியார் ஆங்கில யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார் நயன். அதில் அவர் வலைப்பேச்சு குழுவினரை குரங்குகள் என்று மறைமுகமாக பேசினார். அவரது இந்தப் பேச்சு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் நயனுக்கு எதிராக தங்களது நிலைப்பாட்டினை எடுத்து; இதுவே வலைப்பேச்சு குழுவினர் நயனை குரங்கு என்று சொல்லியிருந்தால் எப்படி இருந்திருக்கும்; அவர்களுக்கு ஒரு நியாயம், உங்களுக்கு ஒரு நியாயமா என்று ஓபனாகவே அடிக்க ஆரம்பித்தார்கள்.

விக்கியும் சர்ச்சையில்: நயன்தான் இப்படி என்றால் விக்னேஷ் சிவனும் ஒரு சர்ச்சையில் சிக்கினார். புதுச்சேரியில் இருக்கும் அரசுக்கு சொந்தமான ஹோட்டலை அவர் விலை பேசியதாக கூறப்பட்டது. ஆனால் தான் விலையெல்லாம் பேசவில்லை; LIK படத்தின் ஷூட்டிங்கிற்கு அனுமதி வாங்குவதற்காகத்தான் புதுச்சேரி மாநில சுற்றுலாத் துறை அமைச்சரை சந்தித்ததாக விளக்கமளித்திருந்தார் விக்கி. இதற்கிடையே ஒரு பேட்டியில், விக்னேஷ் சிவனை தான் திருமணமே செய்திருக்கக்கூடாது.

நான் இழுத்தேன்: அவரை இந்த ரிலேஷன்ஷிப்புக்குள் நான்தான் இழுத்தேன். குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. அவரை நான் திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் அவருக்கென்று தனி அடையாளம் கிடைத்திருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் நயனுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படியெல்லாம் பேசுறாங்க என்று கமெண்ட்ஸ் செய்தனர். இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இருக்கும் வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து Be Happy என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X