தல வந்தா மட்டுமல்ல தலைவர் வந்தாலும் தள்ளிப்போயிடுவோம்.. கூலிக்காக விக்னேஷ் சிவன் பார்த்த வேலை!
சென்னை: பிரதீப் ரங்கநாதன் பிறந்தநாளை முன்னிட்டு ஏதாவது ஒரு அப்டேட் விட வேண்டுமே என்கிற நோக்கில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழுவினர் ஆகஸ்ட் மாதம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ஃபர்ஸ்ட் பன்ச் வெளியாகும் என அறிவித்தனர். ஆனால், தற்போது மேலும், காலதாமாதம் ஆகும் என அறிவித்துள்ளனர்.
அஜித் குமாரின் படத்தை மிஸ் செய்த நிலையில், பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் இயக்க ஆரம்பித்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்துக்கு பிள்ளையார் சுழியில் இருந்தே பிரச்சனை ஆரம்பித்து விட்டது.

படத்தின் தலைப்புக்கு ஏற்பட்ட சிக்கல் காரணமாக LIC என்பதற்கு பதிலாக LIK என மாற்றினர். விடாமுயற்சி படமே பல தடைகளை கடந்து வெளியாகி, குட் பேட் அக்லி முடிந்து அஜித் குமார் கார் பந்தயங்களில் மும்முரம் காட்டி வரும் நிலையில், விக்னேஷ் சிவன் ரொம்பவே டெட் ஸ்லோவாக தனது படத்தை உருவாக்கி வருவது ரசிகர்களை அப்செட்டில் ஆழ்த்தியுள்ளது.
கூலிக்காக விக்னேஷ் சிவன் பார்த்த வேலை: விடாமுயற்சி படம் வெளியாவதால் தங்கள் படத்தை தள்ளி வைக்கிறோம் என டிராகன் படத்தின் ரிலீஸ் தேதியை பிப்ரவரி 14க்கு பதிலாக 21ம் தேதி மாற்றப்பட்டு வெளியானது. இந்நிலையில், தற்போது கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நாளை ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கூலி படத்துக்காக தங்களின் எல்ஐகே படத்தின் ஃபர்ஸ்ட் பன்ச்சை தள்ளிப்போடுவதாக செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ அறிவித்துள்ளது.
பிரதீப் ரங்கநாதனுக்கு அல்வா: பிறந்தநாளுக்கு கேக் தருவாங்க பிரதீப் ரங்கநாதனுக்கு அல்வா கொடுத்து விட்டாரே விக்னேஷ் சிவன் என ரசிகர்கள் ட்ரோல் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர். கன்டென்ட் ரெடியாகவில்லை என்பதை சொல்லாமல், எப்படி சமாளிக்கிறாங்க பாருங்க என்றும் கூலி ஆடியோ லாஞ்சுக்கும் எல்ஐகே ஃபர்ஸ்ட் பஞ்ச்சுக்கும் என்னையா சம்மந்தம் என்றும் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். ஆகஸ்ட் 1ம் தேதியான இன்று தான் ஃபர்ஸ்ட் பன்ச் வெளியாகும் என அறிவித்திருந்தனர். கிங்டம், கூலி, மதராஸி என அனிருத் பிசியாக இருப்பதால் தான் இந்த காலதாமதம் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.
தீபாவளி ரிலீஸ்: எல்ஐகே படத்தின் ரிலீஸ் செப்டம்பர் மாதம் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது தீபாவளிக்கு வெளியீடு தள்ளிப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட டூட் படத்தின் ரிலீஸ் கிறிஸ்துமஸ் அல்லது பொங்கலுக்கு தள்ளிப்போக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











