யோகி பாபு மீது 'கொலவெறி'யில் இருக்கும் விக்னேஷ் சிவன்: காரணம் நயன்தாரா

By Siva

Recommended Video

ட்ரக்ஸ் விற்கும் நயன்தாரா - கோலமாவு கோகிலா கதை லீக்- வீடியோ

சென்னை: இயக்குனர் விக்னேஷ் சிவன் யோகி பாபு செம கோபத்தில் இருக்கிறார்.

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் கோலமாவு கோகிலா. கோலமாவு என்றதும் நயன்தாரா கோலம் போடும் பொடி விற்கிறார் என்று நினைத்துவிட வேண்டாம்.

அவர் போதைப் பொருள் விற்கும் பெண்ணாக நடித்துள்ளாராம்.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

கோலமாவு கோகிலா படத்திற்காக சிவகார்த்திகேயன் எழுதிய கல்யாண வயசு சிங்கிள் இன்று வெளியாகியுள்ளது. வீடியோவில் யோகிபாபு நயன்தாராவை காதலிப்பதாக காட்டியுள்ளனர்.

நயன்தாரா

நயன்தாரா

காதலியின் பெயரை நெஞ்சில் பச்சைக் குத்தி வைத்தவர்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் யோகி பாபு நயன்தாராவின் புகைப்படத்தை நெஞ்சில் ஒட்டி வைத்துள்ளார்.

அருமை

அருமை

சும்மா சொல்லக் கூடாது சிவகார்த்திகேயன் எழுதிய பாடல் நன்றாக உள்ளது. நடிக்க மட்டும் அல்ல தன்னால் பாடலும் எழுத முடியும் என்று நிரூபித்துவிட்டார் சிவகார்த்திகேயன்.

கோபம்

தன் காதலி நயன்தாராவுக்கு ரூட்டு போடும் யோகி பாபு மீது விக்னேஷ் சிவன் கோபத்தில் உள்ளார். யோகி, நயன்தாரா புகைப்படத்தை போட்டு யோகியின் பெயருக்கு பின்னால் கோபமாக இருப்பது போன்ற ஸ்மைலிகளை ட்விட்டரில் போட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

இதுக்குப் போய்

யோகி பாபு மீது உங்களுக்கு அப்படி என்ன கோபம். விடுங்க பாஸ், அது சும்மா படத்துக்கு தானே என்று ரசிகர்கள் விக்னேஷ் சிவனை சமாதானம் செய்துள்ளார்கள். சிலரோ என்ன வயித்தெரிச்சலா என்று கேட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X