வாவ்.. செம்ம.. நயன்தாரா, சமந்தா, விஜய்சேதுபதி.. காத்துவாக்குல ரெண்டு காதல்! சூப்பர் விக்னேஷ் சிவன்!
Recommended Video
சென்னை: தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு பிறகு ஹாஃப் மோடில் இருந்த விக்னேஷ் சிவன், காதலர் தினமான இன்று ஃபுல் ரொமான்ஸ் மூடுக்கு மாறியுள்ளார்.
போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன், தற்போது, விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாக உள்ள "காத்துவாக்குல ரெண்டு காதல்" படத்தை இயக்கவுள்ளார்.
காதலர் தினமான இன்று அந்த அறிவிப்பு போஸ்டரை விக்னேஷ் சிவன் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

நானும் ரவுடி தான் காம்போ
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. தற்போது, அதே கூட்டணியுடன் நடிகை சமந்தாவும் இணைந்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டைட்டில் போஸ்டரை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.
மீண்டும் அனிருத்
நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெற்ற தங்கமே உன்னைத்தான் தேடி வந்தேனே உள்ளிட்ட பல பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இந்நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கும் அனிருத் இசையமைக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாஸ்டர் படத்தின் குட்டி கதை பாடலுக்காக வெயிட் செய்யும் ரசிகர்களுக்கு அடுத்த அப்டேட்டும் கிடைத்து விட்டது.

கன்ஃபார்ம் கம்பேக்
நானும் ரவுடி தான் படத்தின் வெற்றிக்கு பிறகு சூர்யாவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் படம் படுதோல்வியை சந்தித்தது. அதன் பிறகு, நயன்தாராவுடன் காதல், கோயில் கோயிலாக சுற்றுவது என சுற்றித் திரிந்தார் விக்னேஷ் சிவன், தற்போது, மீண்டும் ஃபுல் ஸ்விங்கில் கம்பேக் ஆகி உள்ளார்.

லைகா இல்லை
சிவகார்த்திகேயனை வைத்து இந்த படத்தை எடுக்கப் போவதாக ஆரம்பத்தில் தகவல்கள் பரவின. லைகா நிறுவனத்திடம் விக்னேஷ் சிவன், கதை சொல்லும், போது பட்ஜெட் ஓவராக உள்ளது என்று, நோ சொல்லி விட்டதாகவும் தகவல்கள் கசிந்தன. இந்நிலையில், தற்போது செவன் ஸ்க்ரீன் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்க முன் வந்துள்ளார். விஜய்சேதுபதி நாயகனாக நடிக்கிறார்.
தலைவி – டார்லிங்
விக்னேஷ் சிவன், காதலை தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் சந்தோஷத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். தலைவி நயன்தாரா, டார்லிங் சமந்தா இணைந்து நடிக்கிறார்களா போடு தகிட தகிட என இந்த ரசிகர் கமெண்ட் செய்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
நானும் ரவுடி தான் ரிட்டர்ன்ஸ்
காத்துவாக்குல ரெண்டு காதல் படம் குறித்த அறிவிப்பை விக்னேஷ் சிவன் வெளியிட்ட சில நிமிடங்களிலேயே ட்விட்டரில் #kaathuvaakulaRenduKaadhal ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. ரசிகர்கள் பலரும், நானும் ரவுடி தான் ரிட்டர்ன்ஸ் என்றும், செம்ம காம்போ, வெயிட்டிங் என கமெண்ட் செய்து தங்களின் ஆதரவையும் எதிர்பார்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











