விஜய்சேதுபதி கைமீது கைவைத்து விளக்கை காப்பாற்றும் நயன்தாரா, சமந்தா.. நாளைக்கு ஃபர்ஸ்ட் லுக் வருது!

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த ஹாட் அப்டேட் வெளியாகி உள்ளது.

தீபாவளிக்கே இப்படியொரு போஸ்டரை வெளியிடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், சற்று தாமதமாக தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

குஷி படத்தின் சூப்பர் ஹிட் காட்சியோடு வெளியாகவுள்ள ஃபர்ஸ்ட் லுக்கை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

நானும் ரவுடி தான்

நானும் ரவுடி தான்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் அனிருத் இசையில் வெளியான நானும் ரவுடி தான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. மீண்டும் அதே கூட்டணியுடன் உருவாகி உள்ள படம் தான் காத்துவாக்குல ரெண்டு காதல். கூடுதலாக இந்த படத்தில் சமந்தாவும் நடித்துள்ளார்.

இந்த ஆண்டே

இந்த ஆண்டே

இந்த ஆண்டு காதலர் தினத்துக்கே இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா கலவரம் காரணமாக சமீபத்தில் தான் படத்தின் ஷூட்டிங் மொத்ததும் நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. நெற்றிக்கண் படத்தை போலவே இந்த படமும் ஒடிடி ரிலீஸ் என்கிற பேச்சுக்களும் அடிபட்டு வருகின்றன.

நாளை ஃபர்ஸ்ட் லுக்

நாளை ஃபர்ஸ்ட் லுக்

இந்நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ஹாட் அப்டேட் தற்போது சூப்பரான போஸ்டருடன் வெளியாகி உள்ளது. நாளை இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகப் போவதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

குஷி சீன்

குஷி சீன்

எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் தளபதி விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி படத்தில் இடம்பெற்ற சூப்பரான சீனை இமிடேட் செய்யும் படியான போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. விளக்கு காற்றடித்து அணையாமல் இருக்க விஜய் மற்றும் ஜோதிகாவின் கை ஓடி வந்து தடுக்கும். அதே போல இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தாவின் கைகள் விளக்கை அணையாமல் தடுப்பது போன்ற போஸ்டரை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

படங்களின் கலவையா

படங்களின் கலவையா

ஏற்கனவே சத்யா படத்தின் பஸ் சீன் காட்சி காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இடம்பெற்றிருக்கும் தகவல் அந்த காட்சிகள் லீக்கான நிலையில், ரசிகர்களுக்கு தெரிந்தன. இந்நிலையில், தற்போது குஷி பட காட்சியுடன் கூடிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில், ஒரு வேளை பல படங்களின் கலவையாக இந்த படம் இருக்குமோ? என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

சமந்தா தான் ஹைலைட்டா

சமந்தா தான் ஹைலைட்டா

"First Look (S)" என குறிப்பிட்டுள்ள நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் சமந்தாவை தனியாக ஹைலைட் செய்கிறாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. சமீபத்தில் கணவர் நாக சைதன்யாவை பிரிவதற்கு முன்பாக தனது பெயரை வெறும் S என சமூக வலைதளங்களில் மாற்றியவர் சமந்தா. ஆனால், நாளை ஒரு போஸ்டர் மட்டும் வரப் போவதில்லை பல ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாக உள்ளதை தான் அப்படி குறிப்பிட்டுள்ளனர் என்றும் கூறுகின்றனர். என்னமோ அண்ணாத்த படத்தில் நடந்தது போல இந்த படத்திலும் N இருட்டடைப்பு செய்யப்படாமல் இருந்தால் நல்லது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X