மெரட்டிட்டீங்க அஸ்வின்.. நயன்தாராவின் கனெக்ட் படத்தை பார்த்து பாராட்டிய விக்னேஷ் சிவன்!

சென்னை: நயன்தாரா, சத்யராஜ் மற்றும் அனுபம் கெர் நடிப்பில் உருவாகி உள்ள கனெக்ட் படத்தை பார்த்த இயக்குநர் விக்னேஷ் சிவன் அந்த படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணனை வெகுவாக பாராட்டி உள்ளார்.

மாயா, கேம் ஓவர் படங்களை இயக்கி ஒட்டுமொத்த ரசிகர்களையும் மிரள வைத்தவர் இயக்குநர் அஸ்வின் சரவணன்.

அவர் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வந்த கனெக்ட் திரைப்படம் விரைவில் திரைக்கு வர காத்திருக்கிறது.

ஹாரர் இயக்குநர்

ஹாரர் இயக்குநர்

தமிழ் சினிமாவில் ராகவா லாரன்ஸ் ஸ்டைலில் காமெடி பேய் படங்களும், அஸ்வின் சரவணன் ஸ்டைலில் ஹாரர் பேய் படங்களும் வெளியாகி வருகின்றன. கரணம் தப்பினால் மரணம் என்கிற கதை தான் இப்படி ஹாரர் படங்களை இயக்குவது என்பது, சரியான திரைக்கதையையும் காட்சிகளையும் அமைத்து ரசிகர்களை பயமுறுத்தவில்லை என்றால் படம் ஃபிளாப் ஆகிவிடும். ஆனால், இதுவரை அஸ்வின் சரவணன் இயக்கிய ஹாரர் படங்கள் ரசிகர்களை பயமுறுத்த தவறவில்லை.

நயன்தாராவின் மாயா

நயன்தாராவின் மாயா

கடந்த 2015ம் ஆண்டு நயன்தாரா மற்றும் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன் நடித்த மாயா திரைப்படம் ரசிகர்களை நல்லாவே திகில் அடைய வைத்தது. தியேட்டரில் தனியாக தைரியமாக பேய் படம் பார்த்தால் காசு தருவதாக கூறும் கதையை செம மிரட்டலான ஸ்க்ரீன்பிளேவை அமைத்து படமாக்கி ஹிட் கொடுத்திருந்தார் இயக்குநர்.

டாப்ஸியின் கேம் ஓவர்

டாப்ஸியின் கேம் ஓவர்

அதன் பிறகு எஸ்.ஜே. சூர்யாவை வைத்து இவர் இயக்கிய இறவாக்காலம் வெளியாவதில் ஏகப்பட்ட சிக்கல் ஏற்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு நடிகை டாப்ஸி நடித்த கேம் ஓவர் படத்தையும் பயங்கர மிரட்டலாக எடுத்து ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு வந்தார் இயக்குநர் அஸ்வின் சரவணன். எது நிஜம், எது நிழல் என்றே தெரியாத அளவுக்கு படம் செம த்ரில்லாக இருந்தது

மீண்டும் நயன்தாராவுடன்

மீண்டும் நயன்தாராவுடன்

அடுத்ததாக சமந்தாவை வைத்து ஒரு பேய் படத்தை இயக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், அந்த படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் நயன்தாராவுடன் இணைந்து கனெக்ட் படத்தை இயக்கி உள்ளார் அஸ்வின் சரவணன். ராஜா ராணி படத்திற்கு பிறகு நயனுடன் இணைந்து சத்யராஜ் நடித்துள்ளார். இந்தி நடிகரான அனுபம் கெர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் பாராட்டு

விக்னேஷ் சிவன் பாராட்டு

இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு முழுதாக எடுத்து முடிக்கப்பட்ட கனெக்ட் படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுக்கு அஸ்வின் போட்டுக் காட்டி உள்ளார். அதை பார்த்து அசந்து போன விக்னேஷ் சிவன் மிரட்டிஃபைட்.. என கமெண்ட் அடித்து கனெக்ட் படத்தையும் அதில் நடித்த சத்யராஜ், நயன்தாரா மற்றும் அனுபம் கெர்ரையும் இயக்குநர் அஸ்வினையும் வெகுவாக பாராட்டி உள்ளார். விரைவில், ரசிகர்களையும் மிரட்ட வருகிறது கனெக்ட்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X