நீங்கள் எவ்வளவு பிரச்னை கொடுத்தாலும்.. ஐய்யய்யோ யாரை சொல்கிறார் விக்னேஷ் சிவன்?
சென்னை: போடா போடி படத்தில் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் கடைசியாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக LIK என்ற படத்தை இயக்கிவருகிறார் அவர். இதில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார். இந்தச் சூழலில் பெமி 9 நிறுவனத்தின் கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட விக்னேஷ் சிவன் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இயக்குநர், பாடலசிரியர், நடிகர் என பல முகங்களை கொண்டவர் விக்னேஷ் சிவன். போடா போடி படத்தில் இயக்குநராக அறிமுகமான அவர் அதற்கடுத்ததாக எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்தார். அப்படிப்பட்ட சூழலில் தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா மூலம் தனுஷுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கத்தால் வேலையில்லா பட்டதாரி படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். மேலும் அந்தப் படத்துக்கு டைட்டில் டிசைனராகவும் பணியாற்றினார் விக்னேஷ்.

நானும் ரௌடிதான்: சூழல் இப்படி இருக்க தனுஷின் தயாரிப்பில் நானும் ரௌடிதான் படத்தை இயக்கினார். அந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், நயன்தாரா, ஆனந்த்ராஜ், ஆர்.ஜே.பாலாஜி, ராதிகா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. டார்க் காமெடி ஜானரில் உருவான அந்தப் படத்தில் நயனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தின் போதுதான் இரண்டு பேருக்கும் காதல் மலர்ந்தது. அதற்கு பிறகு இருவரும் லிவிங் டூ கெதரில் இருந்து பிறகு திருமணம் செய்துகொண்டார்கள்.
உச்சக்கட்ட காதல்: திருமணத்துக்கு பிறகு இருவரும் தங்களது வாழ்க்கையை உச்சக்கட்ட காதலோடு நகர்த்திவருகின்றனர். ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை, விட்டுக்கொடுத்தல் என ஃபேவரைட் ஜோடியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். மேலும் நயன்தாரா செய்துவரும் பல தொழில்களில் விக்னேஷ் சிவனும் பார்ட்னராக இருந்துவருகிறார். அந்தவகையில் நயன் ஆரம்பித்திருக்கும் பெமி 9 என்ற நாப்கின் தயாரிக்கும் நிறுவனத்துக்கும் விக்கி சப்போர்ட்டாக இருந்துவருகிறார்.
விக்னேஷ் சிவன் பேச்சு: இந்நிலையில் பெமி 9 நாப்கின் நிறுவனத்தின் 2025ஆம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்வு நேற்று மதுரையில் நடந்தது. இதில் தனது மனைவி நயன்தாராவுடன் விக்னேஷ் சிவனும் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “எங்களுக்கு நீங்கள் எவ்வளவு பிரச்னைகள் கொடுத்தாலும் நாங்கள் காதல் மற்றும் மரியாதையுடன் இருக்கிறோம். அதுதான் எங்களின் பலம். அந்த ஒரு விஷயத்தை மட்டும்தான் நாங்கள் எங்களின் மூலதனமாக வைத்திருக்கிறோம். சினிமாவில் பார்த்து இன்ஸ்பைர் ஆன ஒருத்தரை திருமணம் செய்துகொண்டு ஒரு குடும்பத்தை அமைத்து வாழ்க்கையையும், தொழிலையும் ஷேர் செய்துவருகிறோம்” என்றார்.
யாரை சொல்கிறார்?: விக்னேஷ் சிவனின் இந்தப் பேச்சு யாரை சொல்கிறார் என்ற கேள்வியை ரசிகர்களிடையே எழுப்பியிருக்கிறது. இதற்கிடையே நானும் ரௌடிதான் படத்தின் ஃபுட்டேஜை நயன்தாரா பற்றிய ஆவணப் படத்தில் பயன்படுத்துவதற்கு தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை. இதன் காரணமாக தனுஷை விமர்சித்து நயன் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தை எழுதிக்கொடுத்ததே விக்னேஷ் சிவன்தான் என்று ஒரு தகவல் ஓடிக்கொண்டிருந்தது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











