நார்மல் பீப்பிள் கிடையாது சர்ச்சை.. லைக்குகளுக்காக எங்களை உரிச்சு எடுத்துட்டாங்க.. விக்னேஷ் சிவன் பளிச்
சென்னை: கடந்த ஆண்டில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் குறித்து பரவலாக பேசப்பட்ட சர்ச்சை என்றால் அவர்கள் இருவரும் அவர்களின் நிறுவனம் ஒன்றின் பிராண்ட் புரோமோஷனுக்காக சமூக வலைதள இன்ஃபுளியன்சர்களைச் சந்தித்தனர். அப்போது அங்கிருந்த ஒருவர், பயன்படுத்திய, " நார்மல் பீப்பிள் கிடையாது" என்ற வார்த்தைகள், சும்மா இருந்தவர்களை இழுத்து வீதியில் விட்ட கதையாகிப் போனது. இது தொடர்பாக சமீபத்திய பேட்டி ஒன்றில் விக்னேஷ் சிவன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதாவது அவர் கூறும் போது, அன்று நடந்ததே வேறு, ஆனால் எங்களைப் போட்டு உரித்து எடுத்து விட்டார்கள். நானும் நயனும் அந்த நிகழ்ச்சிக்கு போகிறோம். அப்போது அங்கிருந்த ஒருவரைக் கூப்பிட்டு நாங்கள் இன்னும் சாப்பிடவில்லை, எனவே ஒரு 15 நிமிடம் மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள் நாங்கள் சாப்பிட்டதும் வந்துவிடுகிறோம் என்று கூறினேன்.

உடனே அந்த நபரோ, அண்ணா ஏற்கனவே எல்லோரும் தாமதமாகிவிட்டது என்று அப்செட்டில் இருக்கிறார்கள். எனவே உங்களுடன் அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். எனவே புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டுவிட்டு அதன் பின்னர் எதுவேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாமே என்று கூறினான். நானும் சரி, ஆனால் ஒரு ஒரு நபராக வேண்டாம், மூன்று, நான்கு பேர் ஒன்றாக எடுத்துக் கொண்டால் சீக்கிரம் முடிந்துவிடும், நாங்களும் சாப்பிட சீக்கிரமே சென்று விடலாம் என்று கூறினேன்.
நார்மல் பீப்பிள்: அதற்கு அந்த நபரோ, " நாம் எல்லாம் நார்மல் பீப்பிள் கிடையாது, நாம் எல்லாம் இன்ஃபுளியன்சர்கள் எனவே, சாதாரண மக்கள் போல நடந்து கொள்ள வேண்டாம் என்று தன்னையும் தன்னைப் போன்ற இன்ஃபுளியன்சர்களையும் தான் குறிப்பிட்டு பேசினாரே தவிர, என்னையும் நயன்தாராவையும் சொல்லவில்லை. அந்த வீடியோ இப்போதும் கூட இணையத்தில் உள்ளது. நீங்கள் வேண்டுமானால் எடுத்துப் பாருங்கள்.

லைக்குகளுக்காக: இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி எல்லோரும் எங்களை போட்டு உரித்துக் கொண்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக நான் அந்த சம்பந்தப்பட்ட நபரிடம் பேசி, அந்த வீடியோவை டெலிட் செய்யச் சொன்னேன். அதற்கு அந்த நபர் என்ன சொன்னார் தெரியுமா? ' அண்ணா.. அண்ணா.. இப்போதுதான் லைக்குகள் அதிகம் வர ஆரம்பித்துள்ளது. நாளை காலையில் வேண்டுமானால் டெலிட் செய்து விடுகிறேன் அண்ணா, ப்ளீஸ்' என்று கூறினார். நானோ லைக்குகளுக்காக எங்களைப் போட்டு உரித்துக் கொண்டு இருக்கிறார்களே என்று ஷாக் ஆகிவிட்டேன். இப்படி பேசுபவரிடம் நான் வேறு என்ன பேச முடியும் கூறுங்கள் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications