ஜோடியா போஸ் கொடுத்து யாரை வெறுப்பேற்றுகிறார் நயன்தாரா?.. விக்னேஷ் சிவனின் புதிய புரொஃபைல் பிக் செம!

சென்னை: விக்னேஷ் சிவன் ட்விட்டரில் இருந்து விலகிய நிலையில், தனுஷ் மற்றும் நயன்தாரா இடையிலான பிரச்சனை தான் காரணமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், இன்ஸ்டாகிராமில் இன்னமும் தான் ஆக்டிவாகத் தான் உள்ளேன் என்பதை நிரூபிக்கும் விதமாக சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் புரொஃபைல் பிக்சரையே விக்னேஷ் சிவன் மாற்றியுள்ளார்.

வேலையில்லா பட்டதாரி படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய விக்னேஷ் சிவன் சிம்புவை வைத்து போடா போடி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். அதன் பின்னர் தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தை இயக்கினார்.

nayanthara dhanush vignesh shivan

நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாராவுடன் ஏற்பட்ட நட்பு அப்படியே காதலாக மலர்ந்தது. பல ஆண்டுகள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டு மாமல்லபுரத்தில் உள்ள ரெசார்ட்டில் திருமணம் செய்துக் கொண்டனர். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தற்போது ஜோடியாக நின்றுக் கொண்டு கொடுத்துள்ள லவ்லி போஸ் couple goals ஆக மாறிவிடும் என்கின்றனர்.

மனைவியை பிரிந்த தனுஷ்: ரஜினிகாந்தின் மகளை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட தனுஷ் இரு மகன்களுக்கு தந்தையாக உள்ள நிலையில், பல வருடங்கள் வாழ்ந்த திருமண வாழ்க்கையில் இருந்து முற்றிலுமாக விவாகரத்துப் பெற்று சிங்கிளாக மாறிவிட்டார். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடையே என்ன பிரச்சனை என மண்டையை பிய்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு திடீரென தனுஷ் - நயன்தாரா பிரச்சனை தொக்காக மாட்டிக் கொள்ள இருவர் குறித்து ஏகப்பட்ட கருத்துக்கள் மற்றும் கிசுகிசுக்கள் உலாவி வருகின்றன.

ஹாஷ்டேக் ஹேப்பினஸ்: தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிந்த நிலையில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் #Happiness என்கிற பேக்கிரவுண்ட் உடன் ஹார்ட் போஸ் காட்டி ஒன்றாக நின்றுக் கொண்டு போஸ் கொடுத்த போட்டோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் புரொஃபைல் பிக்சராக வைத்துள்ளார்.

நெற்றியில் முத்தம்: தனது காதல் மனைவி நயன்தாராவுக்கு நெற்றியில் முத்தம் கொடுத்தபடி செம ரொமான்ட்டிக்காக போஸ் கொடுத்த போட்டோவை விக்னேஷ் சிவன் வைத்துள்ள நிலையில், சோஷியல் மீடியாவில் அதனை ஷேர் செய்து வித விதமான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

வெள்ளைக் கொடிக்கு வேலை: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் வெள்ளை நிற உடையில் போஸ் கொடுத்துள்ள நிலையில், வெள்ளைக் கொடிக்கு வேலை வந்துவிட்டது என பதிவிட்டு தனுஷ் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். நெட்பிளிக்ஸில் வெளியான நயன்தாராவின் ஆவணப் படத்திற்கு எதிராக காப்பி ரைட் நோட்டீஸை தனுஷ் கொடுத்ததில் இருந்தே இரு தரப்புக்கும் இடையே சண்டை வலுத்து வருகிறது.

விக்னேஷ் சிவன் படம் எப்போ வரும்?: விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்தின் படத்தை இயக்கும் வாய்ப்பை மிஸ் செய்த நிலையில், விடாமுயற்சி படத்துக்கு முன்னதாக அவருடைய படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பல தயாரிப்பாளர்கள் கைவிரித்த நிலையில், கடைசியில் நயன்தாராவுடன் இணைந்து சொந்த பேனரிலேயே எல்ஐகே படத்தை இயக்கி உள்ளார். பொங்கலுக்கு விடாமுயற்சி வெளியாகவுள்ள நிலையில், பிப்ரவரி மாதம் காதலர் தினத்துக்கு லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X