தமிழ் புத்தாண்டுக்கு LIK படத்தை முடித்த விக்னேஷ் சிவன்.. பிரதீப் உடன் க்ரித்தி என்ன பண்றாரு பாருங்க!
சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், சீமான், எஸ்.ஜே. சூர்யா, க்ரித்தி ஷெட்டி மற்றும் யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக சூப்பரான வீடியோவை வெளியிட்டு விக்னேஷ் சிவன் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தனது குழுவுடன் தெரிவித்துள்ளார்.
அஜித் குமாரின் 62வது படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கிடைத்தது. ஆதிக் ரவிச்சந்திரன் போல அவரும் ஒரு தரமான ஃபேன் பாய் சம்பவத்தை செய்திருப்பார். ஆனால், சில பல காரணங்களுக்காக அந்த வாய்ப்பு அவரது கை நழுவி மகிழ் திருமேனியிடம் சென்ற நிலையில், விடாமுயற்சி படம் உருவாகி வெளியானது.

ஆனால், விடாமுயற்சி படத்தை அஜித் ரசிகர்களே கொண்டாடாத நிலையில், அந்த படம் பெரியளவில் வசூல் வேட்டை நடத்தாமல் தயாரிப்பு நிறுவனத்துக்கு பாக்ஸ் ஆபீஸில் தோல்விப் படமாக மாறியது. இந்நிலையில், அஜித்துக்கு பதிலாக தனது அடுத்த படத்தை பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து எடுக்க ஆரம்பித்த விக்னேஷ் சிவன் ரொம்பவே லேட் பண்ண பிரதீப் அதற்கு நடுவே டிராகன் படத்தை முடித்து ஹிட் கொடுத்துவிட்டார்.
படப்பிடிப்பு நிறைவு: எல்ஐசி என்கிற டைட்டிலுடன் ஆரம்பிக்கப்பட்ட விக்னேஷ் சிவனின் படத்துக்கு டைட்டில் பஞ்சாயத்து கிளம்ப எல்ஐகே என அதனை மாற்றி படமெடுத்து வந்த நிலையில், மலேசியாவில் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டோம் என படக்குழுவுடன் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் படக்குழுவுடன் செம ஹேப்பியாக வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
ஹாட்ரிக் ரெடி: பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான கோமாளி மற்றும் லவ் டுடே படங்கள் வெற்றிப் பெற்றன. அதே போல அவர் ஹீரோவாக நடித்த லவ் டுடே மற்றும் டிராகன் படங்களும் அவருக்கு பாக்ஸ் ஆபீஸ் பிளாக்பஸ்டர்களாக மாறின. இந்நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள LIK திரைப்படமும் அவருக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செம ரிச் லுக்: காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை கடைசியாக விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தாவை வைத்து இயக்கி இருந்தார் விக்னேஷ் சிவன். போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் என அவர் இயக்கிய அனைத்து படங்களின் லுக்குமே ரொம்ப ரிச்சாகவே இருக்கும். இந்நிலையில், வெளிநாட்டில் எல்லாம் எல்ஐகே படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்த நிலையில், மேக்கிங் வீடியோவே செம ரிச்சாக உள்ளதை பார்த்து ரசிகர்கள் படத்தை பார்க்க ரொம்பவே ஆர்வமாகி உள்ளனர்.
தமிழ் புத்தாண்டு வாழ்த்து: மலேசியாவில் மழை எஃபெக்ட்டை பயன்படுத்தி எல்ஐகே படத்தின் இறுதி நாள் காட்சிகளை படமாக்கிய விக்னேஷ் சிவன் தனது ஒட்டுமொத்த டீமுடன் சேர்ந்து படப்பிடிப்பு நிறைவு என்பதை அறிவித்து ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். நடிகை க்ரித்தி ஷெட்டி செல்ஃபி வீடியோவை எடுத்துக் கொண்டு பிரதீப் ரங்கநாதனுடன் பேச அவர் நல்லதே நினை நல்லதே நடக்கும் என சொல்ல அப்படியே அங்கே காத்துக் கிடக்கும் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட படக்குழுவினருடன் சென்று இருவரும் அமர இன்னொரு வீடியோவும் ரசிகர்களுக்கு விருந்தாக கிடைத்துள்ளது. தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் பண்ணிடுங்க பட்டாசாய் இருக்கும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











