பக்கத்தில் நயன்.. விக்னேஷ் சிவனின் ‘மைண்ட் வாய்ஸ்’ என்ன சொல்லுது பாருங்கள்!
விஜய் டிவி விருது வாங்கிய நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : விஜய் அவார்ட்ஸில் இரண்டு விருது வாங்கியதற்காக நயன்தாராவை, இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவரும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனை ஏற்கவே அல்லது மறுக்கவோ செய்யாத நயன் - விக்னேஷ் சிவன் ஜோடி தொடர்ந்து சமூகவலைதளங்களில் இருவரும் இணைந்து இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இவர்களின் இந்த ரொமாண்டிக் படங்களுக்கென்று ஒரு ரசிகர் வட்டமே உருவாகி விட்டது என்றால் மறுப்பதற்கில்லை. இதனால் நயனுடன் விக்னேஷ் சிவன் வெளியிடும் பதிவுகள் உடனடியாக வைரலாகி வருகின்றன.

2 விருதுகளுடன் நயன்:
அந்த வகையில், புதிய பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதில், விஜய் அவார்ட்ஸில் வாங்கிய இரண்டு விருதுகளுடன் நயன்தாராவும், அவர் அருகில் விக்னேஷ் சிவனும் நிற்கின்றனர்.

பாடல்:
இருவரும் நெருக்கமாக நிற்கும் இந்தப் பதிவிற்கு, "பிளாக் அன்ட் வைட் கண்ணு உன்ன பாத்தா கலரா மாறுமே" என நானும் ரவுடி தான் படப்பாடல் வரியை சேர்த்துள்ளார் விக்னேஷ் சிவன். நானும் ரவுடி தான் படத்தின் மூலம் தான் இருவருக்கும் இடையே நட்பு உருவானது குறிப்பிடத்தக்கது.
மைண்ட் வாய்ஸ்:
இதேபோல், மற்றொரு பதிவில், ‘என்னுடைய விருது, அதன் விருதுகளுடன்' என நயன் தாராவை தன் விருது எனக் குறிப்பிட்டுள்ளார். கூடவே, ‘மைண்ட் வாய்ஸ் எனப் போட்டு, நாம எப்போ இப்டி அவார்டா வாங்கி இந்தப் புள்ள கையில் கொடுக்கப் போறோமோ' என ஜாலியாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராட்டு:
நயனின் விருது தொடர்பான மற்றொரு பதிவில், ‘உன்னை நினைத்து பெருமை கொள்கிறேன் நயன்தாரா. இன்னும் இதே போல் நிறைய இதயங்களை நீ ஜெயிக்க வேண்டும்' என விக்னேஷ் சிவன் வாழ்த்தியுள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த பதிவுகள் தற்போது வைரலாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











