2040ம் ஆண்டிலும் ’அம்மா உணவகம்’ பட்டும்மா பாடலில் இதை கவனிச்சீங்களா.. விக்னேஷ் சிவன் செதுக்கல்!

சென்னை: இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு இதுவரை சுமார் 260 கோடி ரூபாய் வசூலை அள்ளிக்கொடுத்து மேலும், ஒரு 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் படத்தை கொடுக்கும் முடிவில் உள்ளார் நடிகர் பிரதீப் ரங்கநாதன். இதுவரை விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான எந்தவொரு படமும் 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெறாத நிலையில், முதல் முறையாக பிரதீப் மூலம் அந்த சாதனையை படைப்பாரா என்பதையும் காண கோலிவுட் காத்திருக்கிறது.

ஸ்மார்ட் போனை மாற்றி 100 கோடி வசூலை லவ் டுடே படத்தில் எடுத்தார் பிரதீப் என்றும் எக்ஸாம் பேப்பரை மாற்றி டிராகன் படத்தின் மூலம் மீண்டும் 100 கோடி எடுத்தார் என்றும் கடைசியாக தீபாவளிக்கு மனைவியை மாற்றி டியூட் படத்தின் மூலம் 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெற்ற பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக 2040 என காலத்தையே மாற்றி இன்னொரு 100 கோடி படத்தை கொடுப்பார் என இப்பவே ரசிகர்கள் மீம் போட்டு வருகின்றனர்.

Vignesh Shivan creates Amma Unavagam at 2040 in LIK Second Single Pattuma

சிவகார்த்திகேயனுக்கு இணையாக கோலிவுட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். இந்நிலையில், இன்று வெளியாகவுள்ள செகண்ட் சிங்கிள் பாடலான பட்டுமா பாடலில் அம்மா உணவகம் இருப்பதை ரசிகர்கள் நோட் பண்ணி வைரலாக்கி வருகின்றனர்.

2040ல் நடக்கும் கதை: தமிழ்நாடே 2040ல் இப்படி இருந்தால் நல்லா இருக்கும் என தமிழ் சினிமா ரசிகர்களை வியப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்ல காத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். அஜித் குமாரின் 62வது படத்தை இயக்க முடியாமல் வெளியேற்றப்பட்ட நிலையில், பொறுமையாக தனது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை அஜித்தின் விடாமுயற்சி, குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்கள் வெளியான பின்னர், பிரதீப் ரங்கநாதனின் டிராகன், டியூட் வந்த பிறகு ரிலீஸ் செய்கிறார். நல்லவேளை படத்தின் ரிலீஸே 2040 வரை செல்லாமல் வரும் டிசம்பர் 18ம் தேதியே வெளியாகிறது என்றும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

அம்மா உணவகம்: ஏற்கனவே லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் டீசரில் 2040ல் பொது மருத்துவமனை எப்படி இருக்கும், டாக்ஸி எப்படி இருக்கும் தலைவர் படம் என ஏகப்பட்ட ரெஃபரன்ஸ் காட்டப்பட்ட நிலையில், இன்று வெளியாகும் பட்டும்மா செகண்ட் சிங்கிள் பாடலில் அம்மா உணவகம் 24 மணி நேரமும் செயல்படும் என ஹைடெக்காக மாறியிருக்கும் காட்சி இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்துள்ளது. தமிழ்நாடு 2040ல் எப்படியெல்லாம் இருக்கப் போகிறது என்பதை காணவே பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை ரசிகர்கள் பார்க்க கிளம்பிவிடுவார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X