இதுவும் கடந்து போகும்... நெற்றிக்கண் பாடலை டெடிகேட் செய்த விக்னேஷ் சிவன்
சென்னை : நெற்றிக் கண் படத்தின் இதுவும் கடந்து போகும் பாடல் வெளியிடப்பட்டு சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.
சித் ஸ்ரீராம் பாடியுள்ள இந்த பாடல் சோர்வான மனங்களை மயிலிறகால் வருடும் விதத்தில் அமைந்துள்ளது.
இந்நிலையில் இந்த பாடலை ப்ரண்ட்லைன் ஊழியர்கள், கொரோனாவிலிருந்து மீண்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அனைவருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவன் டெடிகேட் செய்துள்ளார்.

முதல் பாடல் வெளியீடு
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக் கண் படத்தில் கண்பார்வையற்றவராக நயன்தாரா நடித்துள்ளார் மிலிந்த் ராவ் இயக்கத்தில் கிரிஷ் மியூசிக் செய்துள்ள இந்த படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. உடைந்த மனங்களுக்கு ஊக்கத்தை அளிக்கும்வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது.

மனச்சோர்வை போக்கும் பாடல்
மேலும் சோர்வான மனங்களை மயிலிறகால் வருடவும் செய்கிறது. கார்த்திக் நேதா வரிகளில் சித் ஸ்ரீராம் உயிரூட்டியுள்ள இந்த பாடல் தற்போதைய காலகட்டத்தில் கொரோனா மற்றும் லாக்டவுன், வேலையின்மை உள்ளிட்ட மனச்சோர்வுகளை ஆற்றும் வகையில் அமைந்துள்ளது.

டெடிகேட் செய்த விக்னேஷ் சிவன்
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பாடல் வெளியாகவுள்ளதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்த இயக்குநர் விக்னேஷ் சிவன், தற்போது இந்த பாடலை பிரண்ட்லைன் ஊழியர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மீண்டவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் டெடிகேட் செய்வதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

லிரிக் வீடியோ பாடல்
மேலும் லிரிக் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ள இந்த பாடலில் டாக்டர்கள், காவலர்கள், துப்புறவு பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் கௌரவப்படுத்தும்வகையில் அவர்களது புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளது. இடையிடையே சித் ஸ்ரீராம் பாடும் வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











