கல்யாணத்துக்கு எங்கள கூப்பிடல... விக்னேஷ் சிவனின் பெரியம்மா வேதனை

சென்னை : விக்னேஷ் சிவன் தனது திருமணத்திற்கு தங்களை கூப்பிடவில்லை என அவரின் பெரியம்மா வேதனையுடன் தெரிவித்துள்ளார். இவரின் பேட்டி மீடியாவில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் மிக பிரம்மாண்டமாக இன்று நடைபெற்றது. திரை பிரபலங்கள், நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மிகுந்த பாதுகாப்புடன், மிக பிரம்மாண்டமாக இந்த திருமணம் நடைபெற்றது. 27 வகையான விருந்து, ஆதரவாளர்கள் ஒரு லட்சம் பேருக்கு கல்யாண சாப்பாடு என தடபுடலாக நடந்து வருகிறது. நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் பற்றிய தகவல் தான் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.

என்னை கல்யாணத்துக்கு கூப்பிடல

என்னை கல்யாணத்துக்கு கூப்பிடல

இந்நிலையில் தன்னை திருமணத்திற்கு கூப்பிடவில்லை என் விக்னேஷ் சிவனின் பெரியம்மா தனியார் டிவி சேனல் ஒன்றிற்கு வேதனையுடன் பேட்டி அளித்துள்ளார். அவர் தனது பேட்டியில், நான் விக்னேஷ் சிவனின் பெரியம்மா. அவனது கல்யாணத்திற்கு கூப்பிடுவான் என ரொம்ப எதிர்பார்த்தோம். ஆனால் கடைசி வரை கூப்பிடவில்லை. மிக ஏமாற்றமாக உள்ளது.

Recommended Video

Nayanthara – Vignesh Shivan திருமணத்தில் கலந்துகொண்ட முக்கிய பிரபலங்கள் #Celebrity | Filmibeat Tamil
 விருந்திற்கு வந்தால் வரவேற்போம்

விருந்திற்கு வந்தால் வரவேற்போம்

ஒருவேளை அவர்கள் விருந்திற்கு வந்தால் அவர்களை வரவேற்க தயாராக உள்ளோம். அவனை குல தெய்வம் கோயிலுக்கு அழைத்து போக வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் அவர்கள் தனியாக வந்து குலதெய்வம் கோயிலில் பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றுள்ளனர். என்ன காரணத்தால் எங்களை கூப்பிடவில்லை என தெரியவில்லை. வீட்டில் உள்ள பெரியவர்கள் என்ன சொன்னார்கள் என தெரியவில்லை.

அவன் எங்களை நினைப்பான்

அவன் எங்களை நினைப்பான்

சிறு வயதில் விக்னேஷ் சிவன் எங்கள் வீட்டில் தான் வளர்ந்தான். லீவ் விட்டால் எங்கள் வீட்டிற்கு குடும்பத்துடன் வந்து விடுவார்கள். அவங்க அப்பா இருக்கும் வரை ஒவ்வொரு விடுமுறைக்கும் வருவார்கள். நாங்கள் அனைவரும் வெளியில் சென்று விட்டு வருவோம். ஆனால் இப்போது கல்யாணத்திற்கு கூப்பிடாதது வேதனையாக உள்ளது. நாங்கள் நினைப்பதை போல், அவனும் எங்களை நினைப்பான் என்று நம்புகிறேன் என்றார்.

ஏன், என்ன பிரச்சனை

ஏன், என்ன பிரச்சனை

அவரின் இந்த பேட்டி செம டிரெண்டாகி உள்ளது. விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்திற்கு 200 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டது. ஆனால் அவரின் பெரியம்மா தன்னை அழைக்கவில்லை என பேட்டி அளித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இருவரின் குடும்பத்திற்கும் என்ன பிரச்சனை, என்ன காரணத்தால் சொந்த பெரியம்மாவையே அழைக்கவில்லை என தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X