4வது கனவு நிறைவேறியது, சிவகார்த்திகேயனை இயக்குகிறேன்: விக்னேஷ் சிவன்
சென்னை: சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்குகிறார் விக்னேஷ் சிவன்.
தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் புதுப்பட அறிவிப்பு எதுவும் வெளியிடாமல் இருந்தார். மீண்டும் சூர்யாவையே வைத்து படம் எடுக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்தார்கள்.
இந்நிலையில் சிவகார்த்திகேயனை தன் பட ஹீரோவாக தேர்வு செய்துள்ளார் விக்னேஷ் சிவன்.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
விக்னேஷ் சிவன்
தன்னுடைய நான்காவது கனவு நிறைவேறிவிட்டது என்று கூறி சிவகார்த்திகேயனை இயக்குவது பற்றி ட்வீட் செய்துள்ளார் விக்னேஷ் சிவன். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்குகிறது. படம் அடுத்த ஆண்டு ரிலீஸாகிறது.
அனிருத்
அனிருத் சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஆகிவிட்டார். தனுஷ்-அனிருத் மீண்டும் கூட்டணி சேர்வார்கள் என்று எதிர்பார்த்தால் சிவகார்த்திகேயன்-அனிருத் தான் மீண்டும் சேர்ந்து பணியாற்ற உள்ளனர்.
ரசிகர்கள்
சிவகார்த்திகேயன் படம் குறித்த அறிவிப்பை பார்த்த சூர்யா ரசிகர்களோ அவரை வைத்து மீண்டும் ஒரு படம் பண்ண வேண்டும் என்று விக்னேஷ் சிவனுக்கு அன்பு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











