கழற்றிவிட்ட அஜித்.. கைகொடுக்கத்தான் அந்த பிரபலம் இருக்காரே.. விக்னேஷ் சிவனின் அடுத்த படம் ரெடி?

சென்னை: ஏகே 62விலிருந்து விக்னேஷ் சிவன் கழற்றிவிடப்பட்டதையடுத்து தன்னை நிரூபிக்க அவர் பக்கா ப்ளானுடன் இருக்கிறார் என கூறப்படுகிறது.

போடா போடி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். சிம்பு நடித்து வெளியான அப்படம் விமர்சன ரீதியாக கவனம் ஈர்த்தாலும் வசூல் ரீதியாக பெரிய அளவில் போகவில்லை. இதனையடுத்து சில காலம் படம் எதுவும் இயக்காமல் பாடல்கள் எழுதுவதில் பிஸியாக இருந்தார் விக்னேஷ் சிவன்.

நானும் ரௌடிதான் மூலம் கவனம் ஈர்த்த விக்கி

நானும் ரௌடிதான் மூலம் கவனம் ஈர்த்த விக்கி

அதனைத் தொடர்ந்து நானும் ரௌடிதான் படத்தை இயக்கினார். நயன்தாரா, விஜய் சேதுபதி, ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான அப்படம் மிகப்பெரிய ஹிட்டானது. நானும் ரௌடிதான் படம்தான் இன்றுவரை விக்னேஷ் சிவனின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. நானும் ரௌடிதான் படத்துக்கு பிறகு சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

நானும் ரௌடியில் நயனுடன் காதல்

நானும் ரௌடியில் நயனுடன் காதல்


இதற்கிடையே நானும் ரௌடிதான் படப்பிடிப்பின்போது நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் ஏற்பட்ட பழக்க காதலாக மாறியது. பல வருடங்கள் காதலித்துவந்த இருவரும் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.

ஏகே 62விலிருந்து வெளியேற்றப்பட்ட விக்னேஷ் சிவன்

ஏகே 62விலிருந்து வெளியேற்றப்பட்ட விக்னேஷ் சிவன்

நயன்தாராவுடன் திருமணம் முடிந்த கையோடு அஜித்தின் 62ஆவது படத்தை இயக்க கமிட்டானார் விக்னேஷ் சிவன். அந்த செய்தி பரவியதும் அனைவரும் ஆச்சரியப்படத்தான் செய்தனர். ஏனெனில் மூன்று படங்கள் இயக்கிவிட்டு அதில் ஒரு படம் மட்டும் ஹிட் கொடுத்த இயக்குநர் அஜித்துடன் கமிட்டானதால் வந்த ஆச்சரியம். விரைவில் ஷூட்டிங் என பேசப்பட்ட சூழலில் திடீரென படத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் விக்கி.

அஜித் மீது நயன்தாரா உச்சக்கட்ட கோபம்?

அஜித் மீது நயன்தாரா உச்சக்கட்ட கோபம்?


விக்னேஷ் சிவன் சொன்ன முழு கதை பிடிக்காமல் போனதால்தான் இந்த முடிவு என பலர் கூறினர். அதுமட்டுமின்றி நயன்தாரா லைகாவிடம் நேரடியாக பேசியும் விக்கியை வெளியேற்றும் முடிவிலிருந்து லைகாவும், அஜித்தும் பின்வாங்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் நயன் கடும் அப்செட் ஆனதாகவும், அஜித் மற்றும் லைகா தரப்பு மீது பெரும் கோபத்தில் இருப்பதாகவும் செய்திகள் பரவிவருகின்றன. மேலும், அஜித்துடன் இனி நடிக்கப்போவதில்லை என சபதம் எடுத்ததாகவும் பேச்சு எழுந்திருக்கிறது.

விக்னேஷ் சிவனுக்காக நயன்தாரா எடுத்திருக்கும் சபதம்

விக்னேஷ் சிவனுக்காக நயன்தாரா எடுத்திருக்கும் சபதம்

திருமணம் ஆனதும் விக்னேஷ் சிவனுக்கு இப்படி நடந்தது நயனுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம். எனவே அஜித் போனால் என்ன நான் இருக்கிறேன் என கூறிய நயன் உடனடியாக கதாநாயகியை மையப்படுத்தி விக்னேஷ் சிவனிடம் ஒரு கதையை தயார் செய்ய சொல்லியிருக்கிறார் என தகவல் வெளியாகியிருக்கிறது.

அதற்கேற்றவாறு விக்னேஷ் சிவன் தற்போது அந்தக் கதையை தயார் செய்யும் பணியில் முழு மூச்சோடு இருக்கிற்றாராம். ஹீரோயினை மையப்படுத்தி இதுவரை நயன் நடித்த அறம், மாயா,, O2 உள்ளிட்ட படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றிருப்பதால் இந்தப் படம் கைகொடுக்கும் என விக்னேஷ் சிவன் நம்புகிறார் என்கின்றனர் கோடம்பாக்கத்தினர்.

குறிப்பாக இந்தப் படத்தின் மூலம் விக்னேஷ் சிவனுக்கு ஒரு கம்பேக் கொடுத்துவிட வேண்டும் என்பதை சபதமாகவே எடுத்திருக்கிறார் நயன்தாரா எனவும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X