காசு இல்லாத நேரத்துல.. கடவுள் போல வந்த அனிருத்.. பேருந்து ஜன்னல் எல்லாம் கண்ணீர் - விக்னேஷ் சிவன்!

சென்னை: பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான், யோகி பாபு, கெளரி கிஷன் நடிப்பில் நயன்தாரா தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். வரும் ஏப்ரல் 10ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் இந்த படம் வெளியாகிறது. டிக்கெட் புக்கிங்கும் தொடங்கி விட்டது.

நானும் ரவுடி தான் படம் பண்ணுவதற்காக பாண்டிச்சேரிக்கு கதை மற்றும் லொகேஷ் பார்க்கச் செல்ல வேண்டும். ஆனால், அப்போது தன்னிடம் பஸ்ஸுக்கு வெறும் 250 ரூபாய் மட்டுமே இருந்தது. அந்த நேரத்தில் அனிருத் செய்த உதவியை எல்லாம் நான் வாழ்நாளில் மறக்க மாட்டேன் என மேடையில் ரொம்பவே எமோஷனலாக விக்னேஷ் சிவன் பேசியுள்ளார்.

Vignesh Shivan emotionaly reveals how Anirudh s 50 Thousand Rupees helps him during NRD

நானும் ரவுடி தான் படத்தையே அனிருத்தை ஹீரோவாக வைத்து இயக்கவே விக்னேஷ் சிவன் முயற்சி செய்தார். ஆனால், கடைசியில் அந்த படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக மட்டுமே பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத் முன் மண்டியிட்டு: ஆரம்பத்தில் இருந்தே அனிருத் தான் தனது வளர்ச்சிக்கு அனைத்துமா இன்று வரை இருந்து வருகிறார் என விக்னேஷ் சிவன் உருக்கமாக லவ் இன்சூரன்ஸ் கம்பெனி நிகழ்ச்சியில் பேசியது மட்டுமின்றி அனிருத் முன் மண்டியிட்டபடி எடுத்த போட்டோவையும் இன்ஸ்டாகிராமில் அவர் ஷேர் செய்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

காசு இல்லாத நேரத்துல: நானும் ரவுடி தான் படத்தை பாண்டிச்சேரியில் எடுக்க முடிவு செய்தேன். ஆனால், அங்கே போக என்னிடம் பேருந்துக்கு மட்டுமே வெறும் 250 ரூபாய் பணம் இருந்தது. என்ன பண்றதுன்னே தெரியல. பஸ்ல போயிட்டு இருந்தேன். அப்போ, அனி கால் பண்ணி, விக்கி உன் பேக்ல 50 ஆயிரம் பணம் வச்சிருக்கேன்னு சொன்னதும் அந்த பஸ்ல நான் உட்கார்ந்திருந்த ஜன்னல் கம்பி எல்லாமே கண்ணீரால் நனைந்தது என ரொம்பவே உருகி பேசி மேடையிலேயே அனிருத்துக்கு நன்றி சொன்னார். லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் வரைக்கும் எனக்கு முழு சப்போர்ட்டாக அனிருத் இருந்து வருகிறார் என்றும் விக்னேஷ் சிவன் பேசிய காட்சிகள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகவுள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் விக்னேஷ் சிவனுக்கு முதல் 100 கோடி ரூபாய் வெற்றிப் படமாக அமையுமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X