Vignesh Shivan: பார்க்காம தப்பு பண்ணிட்டேன்.. விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்!
சென்னை: Vignesh Shivan - விஜய் ரசிகர்கள் மற்றும் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என லோகேஷ் கனகராஜ் பெரிய போஸ்ட் போட்டு தனது விளக்கத்தை கொடுத்துள்ளார்.
நடிகர் விஜய்க்கும் லோகேஷ் கனகராஜுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது போல சித்தரிக்கப்பட்ட போஸ்ட்டை விக்னேஷ் சிவன் லைக்ஸ் செய்தது தான் இந்த பிரச்சனைக்கு காரணமாக மாறியது.

இதன் காரணமாகத்தான் நடிகர் அஜித் உங்களை விடாமுயற்சி படத்தில் இருந்தே விரட்டி விட்டார் என விஜய் ரசிகர்கள் நயன்தாரா கணவரை கடித்து குதற ஆரம்பித்து விட்டனர்.
ரசிகர்கள் சண்டையில் சிக்கிய விக்கி: இயக்குநர் விக்னேஷ் சிவன் எப்போதுமே அன்பான இயக்குநராகவே வலம் வரும் நிலையில், ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார். நயன்தாரா மற்றும் தனது மகன்களான உயிர் மற்றும் உலக் உள்ளிட்டோருடன் ஹேப்பியாக இருக்கும் போஸ்ட்களை போட்டு வரும் விக்னேஷ் சிவன் திடீரென இப்படியொரு ரசிகர்கள் சண்டையில் வசமாக வந்து சிக்கிக் கொண்டதும் ரஜினி ரசிகர்கள் விக்னேஷ் சிவன் எங்க சைட் என்றும் அவருக்கு உண்மை தெரிந்து தான் லைக் போட்டார் என கோர்த்து விட்டனர்.
என்ன பிரச்சனை: நடிகர் விஜய்க்கும் லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும் இடையே பிரச்சனை என வதந்திகள் பரவிய நிலையில், லோகேஷ் கனகராஜ் அந்த வதந்திகளை நானும் விஜய் அண்ணாவும் ஒன்றாகவே பார்த்து சிரித்தோம் என பேசி முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இருவருக்கும் சண்டை என ரஜினி ரசிகர் போட்ட பதிவுக்கு தெரியாத்தனமாக விக்னேஷ் சிவன் போட்ட லைக் தான் தற்போது பிரச்சனையாக வெடித்துள்ளது.

விக்னேஷ் சிவன் விளக்கம்: இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் போட்டோவை பார்த்த உடனே எனக்கு ரொம்ப பிடித்த இயக்குநர் என்பதால் லைக் போட்டு விட்டேன். அந்த வீடியோவை நான் பார்க்கவே இல்லை. ஆனால், அதன் பின்னர் தான் இப்படியொரு பஞ்சாயத்து என்னுடைய லைக் வைத்து ஓடிக் கொண்டிருப்பதை அறிந்து கொண்டேன். எந்தவொரு உள்நோக்கத்துடனும் இதனை நான் செய்யவில்லை. நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜின் தீவிர விசிறி நான், அவர்கள் வொர்க் எனக்கு ரொம்பவே பிடிக்கும் எனக் கூறியுள்ளார்.
மன்னிப்பு: விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களே என்னை மன்னித்து விடுங்கள், நான் அந்த வீடியோவில் உள்ள கன்டென்ட்டை பார்க்காமல் வெறுமனே லைக் போட்டது தான் பெரிய தப்பாகி விட்டது. அதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன். இது நான் தெரியாத்தனமாக செய்த பிழை தான். இதை வைத்து யாரும் தேவையில்லாமல் மேலும், கமெண்ட் போட்டு உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். லியோ படம் 19ம் தேதி வெளியாகி பிளாக்பஸ்டர் அடிக்கப் போகிறது. அதை காண காத்திருக்கிறேன். உங்கள் கொண்டாட்டத்தை ஆரம்பியுங்கள் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











