பாவம், பசிக் கொடுமை: எச்சில் செய்த ஜொமாட்டோ பாய்க்கு விக்னேஷ் சிவன் ஆதரவு
Recommended Video

சென்னை: விக்னேஷ் சிவன் போட்டுள்ள ட்வீட்டை பார்த்தால் நீங்க இவ்வளவு நல்லவரா என்று தான் கூறத் தோன்றுகிறது.
ஜொமாட்டோ டெலிவர் ஆள் ஒருவர் வாடிக்கையாளருக்கு கொண்டு சென்ற உணவை வழியில் சாப்பிட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவை பார்த்த பிறகு ஆன்லைனில் உணவு ஆர்ட்ர் செய்ய லைட்டா பயமாக உள்ளது.
விக்னேஷ் சிவன்
ஜொமாட்டோ டெலிவரி பாய் செய்த சேட்டை வீடியோவை பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவனோ, பொறுப்பை மறக்கடித்த பசியின் கொடுமை...பாவம். மன்னிப்போம், மறப்போம், அட்டூழியம் அல்ல ... பசி 😕🙁 ... !! என்று ட்வீட் போட்டுள்ளார்.
எரிச்சல்
ஜொமாட்டோ டெலிவரி பாயின் செயலை பார்த்து கோபம் அடைந்து, முகம் சுளித்தவர்கள் அதிகம். இந்நிலையில் விக்னேஷ் சிவன் அவருக்காக பாவப்பட்டுள்ளார். இதை பார்த்து சிலர் விக்கியை பாராட்டியுள்ளனர்.
விளாசல்
விக்னேஷ் சிவனுக்கு நல்ல மனசு எல்லாம் இல்லை, சும்மா பேசணும்னு பேசுறார் என்று சிலர் விளாசியுள்ளனர்.

சந்தேகம்
அந்த ஜொமாட்டோ வீடியோவை பார்த்ததில் இருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்தால் நமக்கும் இப்படித் தான் எச்சில் செய்த உணவு வருமோ என்ற சந்தேகம் பலருக்கும் வந்துவிட்டது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் டெலிவரி பாய்க்காக பாவப்பட்டுள்ளதை பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


Click it and Unblock the Notifications











