»   »  எப்பா, விக்கி இப்பயாச்சும் நல்ல வார்த்தை சொன்னீகளே: சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி

எப்பா, விக்கி இப்பயாச்சும் நல்ல வார்த்தை சொன்னீகளே: சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தானா சேர்ந்த கூட்டம் பற்றி ரசிகர்கள் எதிர்பார்த்த நல்ல செய்தியை தெரிவித்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம். படத்தை துவங்கிய பிறகு அது குறித்து எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார் விக்கி.

படம் பற்றி ஏதாவது சொல்வீர்களா, இல்லையா என்று சூர்யா ரசிகர்கள் விக்கியை கலாய்த்து மீம்ஸ் போட்டனர். இந்நிலையில் விக்கி நல்ல செய்தி தெரிவித்துள்ளார்.

ஃபர்ஸ்ட் லுக்

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் தந்தை-மகன் உறவு குறித்து காண்பிக்கப்படும்.

தானா சேர்ந்த கூட்டம் ஃபர்ஸ்ட் லுக் - ஜூலை முதல் வாரம்

#TSKUpdates
#AnbaanaSuriyaFans என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

ரசிகர்கள்

விக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டும் அவர் பேச்சை நம்ப சூர்யா ரசிகர்கள் சிலர் தயாராக இல்லை.

டேட்

நன்றி ப்ரோ, ஃபைனல் டேட் தான என்று விக்னேஷ் சிவனிடம் ஒரு ரசிகர் கேட்டுள்ளார்.

அது என்ன?

இந்த ஃபர்ஸ்ட் வீக் லாஸ்ட் வீக் வேண்டாம் தேதியை சொல்லுங்க என்று சூர்யா ரசிகர் ஒருவர் விக்கி மீது நம்பிக்கை இல்லாததை வெளிப்படுத்தியுள்ளார்.

நன்றி

நன்றி தல என்று இப்படியும் ஒரு ரசிகர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார்.

English summary
Suriya fans are happy as director Vignesh Shivan has finally given some update about TSK.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil