LIK : பேச பேச அழுத விக்னேஷ் சிவன்.. அதைப் பார்த்ததும் கண்ணீர் சிந்திய பிரதீப் ரங்கநாதன்
சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் LIK. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, சீமான், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படக்குழு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது அவர் பேசுகையில், " எங்களிடம் இருக்கும் மொத்த பணத்தையும் போட்டு படத்தை எடுத்துவிட்டோம். எனவே சமூக வலைதளங்களில் இருக்கும் இன்ஃபுளியன்சர்கள் இந்த படத்தை திட்டாமல், படத்தில் எது எல்லாம் பாசிடிவான விஷயமோ அதை பற்றி பேசி படத்தை பாராட்டுங்கள். நான் கேசரி செய்தால் மட்டும் ஏன் காரமாக இல்லை என்று கேட்கிறீர்கள், நான் சிக்கன் குழம்பு செய்தால் ஏன் இனிப்பாக இல்லை என்று கேட்கிறீர்கள்.

100 கோடி: என்னால் என்ன பிரமாண்டமான படமா எடுக்க முடியும், என்னால் இப்படித்தான் ஜாலியான படம் எடுக்க முடியும். நாங்கள் இன்னும் வெளியே செட்டில் செய்ய வேண்டிய பணம் இருக்கிறது. பலரும் வெளியே எங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இன்ஃபுளியன்சர்கள், ரசிகர்கள் தயவு செய்து எங்கள் படத்திற்கு ஆதரவு கொடுத்து, படத்தை ரூபாய் 100 கோடி வசூலை எட்ட வைக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். வேண்டுமானால் நான் மேடையிலேயே அழுவதை போல தம் நைல் வைப்பதற்காக அழுகிறேன் என்று சொல்லிக் கொண்டு அழுவதை போல விளையாட்டாக நடித்துக் காட்டுகிறார்.
விளையாட்டு: தொடர்ந்து பேசுகையில், இந்த படத்தை ரூபாய் 100 கோடி வசூலை எட்ட வைத்து பிரதீப் ரங்கநாதன் செல்லத்திற்கு நான்காவது முறையாக ரூபாய் 100 கோடி வசூல் என்ற போஸ்டரை ஒட்ட வேண்டும் என்றும் பேசினார். விக்னேஷ் சிவன் இப்படி சொன்ன போது பிரதீப் ரங்கநாதனும் அழுவது போல விளையாட்டாக நடித்தார். விக்னேஷ் சிவன் பேசுகையில் கவுண்டமணி காமெடி, வடிவேல் காமெடி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை மென்ஷன் செய்து பேசியதால் மொத்த அரங்கமும் சிரிப்பலையில் மூழ்கியது. LIK படம் இதுவரை சுமார் 50 கோடிகள் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











