Nayanthara - கலங்கிப்போன நயன்தாரா.. திருமண நாளுக்கு விக்னேஷ் சிவன் செய்ததை பாருங்க

சென்னை: Nayanthara (நயன்தாரா) திருமண நாள் அன்று விக்னேஷ் சிவன் செய்த செயலைப் பார்த்து நயன்தாரா கலங்கிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

வாழ்க்கையில் எவ்வளவு பிரச்னைகளை சந்தித்தாலும் அதையெல்லாம் மீறி இப்போது கோலிவுட்டில் டாப் ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா. இரண்டு காதல் தோல்விகளை அவர் சந்தித்தபோது தனிப்பட்ட முறையில் விமர்சனங்களை சந்தித்தார். இருப்பினும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கினார்.

திருமணம்: பல வருடங்கள் காதலித்த இரண்டு பேரும் கடந்த வருடம் ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர். பிரமாண்டமாக திருமணம் நடத்தியது மட்டுமில்லாமல் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் பல்லாயிரக்கணக்கான ஆதரவற்றவர்களுக்கு உணவு அளித்து பலரது பாராட்டையும் பெற்றனர். திருமணம் ஆன நான்கு மாதங்களில் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர்.

Vignesh Shivan Gave Surprise To Nayanthara For First Wedding Anniversary

உலக், உயிர்: நயன் எதை செய்தாலும் அதை சர்ச்சையாக்குவது வழக்கமாகிவிட்டதால் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதையும் சர்ச்சையாக்கினார்கள். ஆனால் அதுகுறித்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் வாடகை தாய் விவகாரத்தில் எந்த விதிமீறலும் நிகழவில்லை என்பது உறுதியானது. இதனையடுத்து ஒரு குழந்தைக்கு உலக் தெய்வீக் N சிவன் என்றும், மற்றொரு குழந்தைக்கு உயிர் ருத்ரோனில் N சிவன் என்றும் பெயர் வைத்தார்கள்.

திருமண நாள்: இந்நிலையில் இருவரும் நேற்று முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினார்கள். நயன்தாரா தனது இரண்டு குழந்தைகளோடு மகிழ்ச்சியோடு இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தை அதிர வைத்தது. அவர்கள் இரண்டு பேருக்கும் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். அவர்களது வீட்டில் நடந்த கொண்டாட்டத்தில் தங்களுக்கு நெருக்கமானவர்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர்.

விக்னேஷ் சிவன் போஸ்ட்: திருமண நாளை முன்னிட்டு நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் தெரிவித்திருந்த வாழ்த்தில், பல ஏற்றத் தாழ்வுகளுடன் முதல் ஆண்டை நிறைவுசெய்துள்ளோம். வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பும் போது, இந்த அமைதியான குடும்பத்தை பார்த்ததும் மனம் ஆறுதல் அடைகிறது.

இந்த எனர்ஜியால் தொடர்ந்து தனது இலக்குகளை நோக்கி பாசிட்டிவாக ஓடிக்கொண்டிருக்கிறேன். எனது மகன்களுடன் அனைத்தையும் ஒன்றாக உணர்கிறேன். இந்தக் குடும்பமே எனக்கு பலமாக இருப்பதுடன் வாழ்க்கையையும் அழகாக மாற்றியுள்ளது" என குறிப்பிட்டிருந்தார்.

விக்னேஷ் சிவனின் சர்ப்ரைஸ்: இந்நிலையில் திருமண நாள் கொண்டாட்டத்தின்போது விக்னேஷ் சிவன் செம சர்ப்ரைஸ் ஒன்றை நயன்தாராவுக்காக செய்தார். அதாவது, கொண்டாட்டம் நடந்துகொண்டிருந்தபோது நானும் ரௌடிதான் படத்தில் இடம்பெற்ற ஒரு கணம் ஒருபோதும் பிரியக்கூடாது என்ற பாடலை புல்லாங்குழல் கலைஞரை வைத்து இசைத்தபடி வர செய்தார்.

கலங்கிய நயன்: இதனை சற்றும் எதிர்பார்க்காத நயன் தாரா ஸ்வீட் ஷாக்குடன் விக்கியின் கைகளை அணைத்தபடி காதலுடன் முத்தமிட்டபடி கலங்கியபடி அமர்ந்திருந்தார். இதுதொடர்பான வீடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மேலும் அவர் அந்த வீடியோவோடு, 'சிறந்த கொண்டாட்டமாக இது அமைந்தது. 12 வயதிலிருந்து நண்பராக இருக்கும் நவீனுக்கு (புல்லாங்குழல் வாசித்தவர்) நன்றி. உனது இந்த செயலால் நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டோம்' என எமோஷனலாக பதிவிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X