ஒரு வார்த்த சொல்லியிருக்கலாம்.. வயிறு எரியுது.. புலம்பி தீர்க்கும் விக்னேஷ் சிவன்.. ஏன்னு பாருங்க!
சென்னை: இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த விக்னேஷ் செல்வன் வயிறு எரியுது என்று புலம்பியுள்ளார்.
Recommended Video
நெல்சன் திலீப்குமார், நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார்.
இந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. கடந்த மார்ச் மாதம் ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் ஆகிய காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது.

விஜய்யை வைத்து பீஸ்ட் படம்
இந்நிலையில் நடிகர் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார் நெல்சன். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணாதாஸ், விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

முதல் ஷெட்யூல் ஓவர்
பீஸ்ட் படத்தின் முதல் ஷெட்யூல் ஜார்ஜியாவில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது ஷெட்யூல் சென்னையில் நடைபெறும் என பிரமாண்ட செட் அமைக்கப்பட்டது. ஆனால் லாக்டவுன் காரணமாக இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்பு தொடங்குவது தாமதமானது.

தோனியின் விளம்பர பட ஷூட்டிங்
தற்போது சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தோனி நடிக்கும் விளம்பர பட ஷூட்டிங்கும் நேற்று அதே ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதனை அறிந்த தோனி, விஜய்யை ஸ்டுடியோவுக்கு சென்று அவரை நேரில் சந்தித்தார். விஜய்யும் தோனியும் சந்தித்துக்கொண்ட போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

வயிறு எரியும் விக்னேஷ் சிவன்
இந்நிலையில் விஜய் மற்றும் தோனியுடன் எடுத்துக் கொண்ட படத்தை பீஸ்ட் பட இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த அவரது நண்பரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன், "ஒரு வார்த்த சொல்லிருக்கலாம்... 274 டிகிரி செல்சியஸ் டிகிரிக்கு வயிறு எரிகிறது. ரா ஃபைலை அனுப்பு நெல்சன். நான் ஃபோட்டோ ஷாப்பாவது பண்ணிக் கொள்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

எங்களுக்கும் இப்படிதான் இருக்கும்
விக்னேஷ் சிவனின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், நீங்க நயன்தாரா கூட போட்டோ போடும் போதெல்லாம் எங்களுக்கும் இப்படித்தான இருந்திருக்கும் என பதிலுக்கு கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

நிச்சயம் ஆனதை சொல்லியிருக்கலாம்
மற்றொரு நெட்டிசனான இவர் நீங்களும் முன்னாடியே உங்களுக்கும் நயன்தாரவுக்கும் நிச்சயதார்த்தம் ஆனதை சொல்லியிருக்கலாம் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

ப்ளீஸ் செகண்ட் சிங்கிள் அப்டேட்
நீங்க காத்து வாக்குல ரெண்டு காதல் பத்தி எதுவும் சொல்லாம இப்படி சைலன்ட்டா இருந்தா எங்களுக்கும் வயிறு இப்படிதான் இருக்கும் சார். ப்ளீஸ் செகண்ட் சிங்கிள் அப்டேட் கொடுங்க சார் என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்

நாங்களும் மார்ஃபிங் பண்ணிக்கிறோம்
மற்றொரு நெட்டிசனான இவர், ரா ஃபைல் கிடைச்சா பப்ளிக்கா போடுங்க அண்ணா, நாங்களும் சிறுத்தை சிவாக்கிட்ட கொடுத்து எங்க போட்டோவ வச்சு மார்ஃப் பண்ணிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

விக்கி நயன் போட்டோ ஷாப்
விக்னேஷ் சிவனின் பதிவை பார்த்த இந்த நெட்டிசன், விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஜோடியாக இருக்கும் போட்டோவை விஜய் மற்றும் தோனி சந்திப்பு போட்டோவுடன் சேர்த்து போட்டோ ஷாப் செய்துள்ளார். மேலும் உங்களுடைய போட்டோ எதுவும் தனியாக கிடைக்கவில்லை என்றும் இந்த நெட்டிசன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











