அப்போ நயன்தாரா கடைக்கு போய் பால் பாக்கெட் வாங்குறாங்களா.. விக்னேஷ் சிவனை விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: போதைப் பொருள் விழிப்புணர்வு சம்பந்தமாக சென்னையில் காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட குறும்படப் போட்டிக்கு பரிசு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் தலைமையிலான குழு தான் அந்த குறும்படங்களை பார்த்து யார் வெற்றிப் பெற்றது என்பதை அறிவித்தது.

இந்நிலையில், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விக்னேஷ் சிவன் தனது திரைப்படங்களில் சிகரெட், மது, போதைப் பொருள் காட்சிகள் இல்லை என்று கூறியிருந்தார். ஆனால், இப்படியொரு காட்சியை விக்னேஷ் சிவனே வைத்திருக்கிறாரே என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

என் படங்களில் தண்ணி, தம் சீன் இருக்காது

என் படங்களில் தண்ணி, தம் சீன் இருக்காது

முன்பெல்லாம் ஹீரோக்களே புகைப்பிடிப்பது, சரக்கடிப்பதை ஸ்டைலிஷ் ஸ்டேட்மென்ட்டாகவே வைத்து நடித்து வந்தனர். சமீப காலமாக அது பெருமளவில் குறைந்து வருகிறது. மேலும், எனது படங்களில் அது போன்ற காட்சிகளையே நான் வைத்தது கிடையாது. தானா சேர்ந்த கூட்டம் படத்திற்காக தணிக்கை குழு என்னை இதற்காகவே பாராட்டியது என்றார்.

பாண்டிச்சேரியில் படம் பண்ணியே

பாண்டிச்சேரியில் படம் பண்ணியே

மேலும், பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த விக்னேஷ் சிவன் பாண்டிச்சேரியில் நானும் ரவுடி தான் படம் பண்ணும் போது கூட சரக்கு சீனையே வைக்கவில்லை என பெருமிதத்துடன் கூறியிருந்தார். சினிமாவில் போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என பேசியிருந்தார்.

நயன்தாரா பீர் வாங்கும் காட்சி

நயன்தாரா பீர் வாங்கும் காட்சி

இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியதை கேட்ட நெட்டிசன்கள் உடனடியாக நானும் ரவுடி தான் படத்தில் நடிகை நயன்தாரா அப்பா இது பாண்டிச்சேரிப்பா என கூறி விட்டு ஒயின் ஷாப்புக்கு சென்று பீர் வாங்கும் காட்சியை எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு அப்போ நயன்தாரா அந்த கடையில போயிட்டு பால் பாக்கெட்டா வாங்குறாங்க என ட்ரோல் செய்து வருகின்றனர்.

பதிலடி

பதிலடி

அந்த காட்சியில் கூட நயன்தாரா பீர் வாங்குவது போலத்தான் இருக்கும். யாரும், சரக்கு அடிப்பது போல இருக்காது. மேலும், விஜய்சேதுபதி கடைசி வரை டீ டோட்டலராகவே அந்த படத்தில் காட்டியிருப்பார் விக்னேஷ் சிவன் என அவருக்கு ஆதரவாக அவரது ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

பாரிலேயே வேலை

பாரிலேயே வேலை

கடந்த ஆண்டு வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் காலையில் கால் டாக்ஸி ஓட்டும் விஜய்சேதுபதி இரவு நேரத்தில் பாரில் தான் பாடிகார்டாக வேலை பார்த்துக் கொண்டிருப்பார். ஆனாலும், விஜய்சேதுபதி சரக்கடிப்பது போன்ற காட்சிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் வைத்திருக்க மாட்டார் என கமெண்ட்டுகள் குவிகின்றன.

கலாய்த்த உதயநிதி

கலாய்த்த உதயநிதி

நானும் ரவுடி தான், காத்து வாக்குல ரெண்டு காதல் என்கிற தலைப்பில் படம் எடுத்த விக்னேஷ் சிவனை எப்படி போலீஸ் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை நடத்துவதற்கு அழைத்தார்கள் என்று நான் வியக்கிறேன் என அந்த நிகழ்ச்சியிலேயே உதயநிதி ஸ்டாலின் விக்னேஷ் சிவனை கலாய்த்ததும் சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.

அடுத்த பட அறிவிப்பு

அடுத்த பட அறிவிப்பு

அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்க முடியாத சூழல் விக்னேஷ் சிவனுக்கு உருவான நிலையில், அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படத்தை இயக்கப் போகிறார் என பேச்சுவார்த்தைகள் அடிபட்டு வருகின்றன. ஆனால், இன்னொரு புது முக இயக்குநரும் பிரதீப்பை இயக்கப் போகிறார் எனக் கூறுகின்றனர். இந்நிலையில், விக்னேஷ் சிவன் தனது அடுத்த பட அறிவிப்பை எப்போ வெளியிடுவார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X