LIK படத்தை ரிலீஸ் பண்ண.. நயன்தாராவிடம் பாடாய்ப்படும் விக்னேஷ் சிவன்.. இப்படி கலாய்க்கிறாங்களே?
சென்னை: லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவான இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் அடுத்து ஆரம்பித்த படம் தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK). ஆனால், பிரதீப் ரங்கநாதன் அடுத்து நடிக்க ஆரம்பித்த டிராகன் மற்றும் டியூட் என 2 படங்களும் வெளியாகி முதல் படத்தை போலவே 100 கோடி கிளப்பில் இணைந்து விட்டன.
ஆனால், இன்னமும் விக்னேஷ் சிவன் ஆரம்பித்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் மட்டும் ஏன் ரிலீஸ் ஆகவில்லை என ரசிகர்கள் புலம்பிக் கொண்டிருக்கும் நிலையில், திடீரென விக்னேஷ் நடித்த விளம்பரம் ஒன்று வெளியாக அதை பார்த்த நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

மேலும், அந்த விளம்பரத்தில் நயன்தாரா விக்னேஷ் சிவனை பாடாய்ப்படுத்துவதை பார்த்து விளம்பர டைரக்டர் ரொம்பவே குசும்பான ஆள் தான் என்றும் கிண்டல் செய்து வருகின்றனர்.
விளம்பரத்தில் விக்னேஷ் சிவன்: மசாலா விளம்பரத்தில் லுங்கி கட்டிக் கொண்டு திடீரென மனைவி நயன்தாராவுடன் போனில் பேசிக் கொண்டே வீட்டில் அவசர சமையல்காரனாக மாறியது போன்ற ஒரு விளம்பரம் வெளியாகி உள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் வீட்டில் தினமும் நயன்தாரா இப்படித்தான் விக்னேஷ் சிவனை வேலை வாங்குகிறாரா? ரொம்ப பாவம் என கமெண்ட் போட்டு வருகின்றனர். நயன்தாராவை திருமணம் செய்துக் கொண்டு விளம்பரத்தில் நடிப்புக்காக கூட விக்னேஷ் சிவனால் கோப பட முடியவில்லையே என்றும் ட்ரோல்கள் பறக்கின்றன.
எல்ஐகே ரிலீஸ் பண்ண என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு: பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை விக்னேஷ் சிவன் வெளியிட இப்படி விளம்பரங்களில் எல்லாம் நடிக்க வேண்டியிருக்கே என்றும் நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் ரோஸ்ட் செய்து வருகின்றனர். காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்த சமந்தா தயாரிப்பாளராக ஒரு படத்தை ரிலீஸ் செய்து இன்னொரு படத்தை லீடு ஹீரோயினாகவும் ரிலீஸ் பண்ண ரெடியாகி விட்டார். அந்த படத்தின் இயக்குநர் இன்னமும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் திணறுகிறாரே என்கின்றனர்.
பிப்ரவரி 13 ரிலீஸ்: ட்ரோல்கள் ஒரு பக்கம், விக்னேஷ் சிவனை பார்த்து பரிதாபப்டுவது ஒருபக்கம் இருந்தாலும், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் இன்று சென்சார் செய்யப்படவுள்ளதாகவும் சென்சார் சான்றிதழ் கிடைத்ததும் வரும் பிப்ரவரி 13ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு படம் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதீப் ரங்கநாதனும் புரமோஷனுக்கு வருவார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











