Nayanthara - நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட்.. காரின் விலை இவ்வளவா?
சென்னை: Nayanthara (நயன்தாரா) நயன்தாராவின் பிறந்தநாளுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் காஸ்ட்லி கார் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறார்.
கோலிவுட்டின் டாப் நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார் நயன்தாரா. இரண்டு காதல் முறிவுகளுக்கு பிறகு சினிமாவிலிருந்து பிரேக் எடுத்திருந்த அவர் மீண்டும் நடிக்க வந்து நானும் ரௌடிதான் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்துவிட்டு வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றுக்கொண்டார். அவர்களுக்கு உயிர், உலக் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நடிப்பில் பிஸி: திருமணம் ஆன பிறகு நடித்து வந்த நயன் குழந்தைகள் பிறந்த பிறகு கண்டிப்பாக நடிப்பிலிருந்து ஒதுங்கிவிடுவார் என்றுதான் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார். குறிப்பாக அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்து மெர்சல் செய்தார் நயன் தாரா.
தொடர் வாய்ப்புகள்?: ஜவான் படத்துக்கு தமிழ்நாட்டில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை என்றாலும் பாலிவுட்டில் கிடைத்திருக்கிறது. மேலும் நயனின் நடிப்பையும் பலரும் பாராட்டினார்கள். எனவே சில பாலிவுட் பட வாய்ப்புகள் அவருக்கு தொடர்ந்து கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி அடுத்ததாக அவர் ரன்வீர் சிங் நடிக்கும் படத்தில் நடிக்க கமிட்டாகியிருப்பதாகவும் தகவல் ஒன்று ஓடுகிறது.
தமிழில் நயன்: இப்படி பாலிவுட்டில் கவனம் செலுத்திவரும் அவர் தமிழிலும் தனது கவனத்தை செலுத்திவருகிறார். அதன்படி அவரது நடிப்பில் கடைசியாக தமிழில் இறைவன் வெளியானது. அடுத்ததாக அன்னபூரணி டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியாகிறது. இது அவருக்கு 75ஆவது படமாகும். இது தவிர மண்ணாங்கட்டி படத்திலும் அவர் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
சோஷியல் மீடியா: நயன்தாரா சமூக வலைதளத்திலிருந்து பல வருடங்கள் ஒதுங்கியே இருந்தவர். ஆனால் ஜவான் படத்தில் நடித்தபோது ப்ரோமோஷனுக்கு நேரில் செல்லாததால் இன்ஸ்டாகிராம் கணக்கு ஆரம்பித்தார். அதில் முதல் வீடியோவாக குழந்தைகளுடன் இருக்கும் வீடியோவை பதிவிட்டுவிட்டு அடுத்து ஜவான் தொடர்பான வீடியோக்களை பகிர்ந்தார். தொடர்ந்து தான் சார்ந்த விஷயங்களை அதில் பகிர்ந்து வருகிறார்.
விக்கியின் கிஃப்ட்: இந்நிலையில் நயன் தாரா பிறந்தநாள் கடந்த 18ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அதனையொட்டி விக்னேஷ் சிவன் மெர்சிடிஸ் மேபேக் கார் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறார். அதன் விலை 2.60 கோடியிலிருந்து 3.40 கோடி ரூபாய் வரை இருக்கும் என தெரிகிறது. விக்னேஷ் சிவன் தனக்கு கொடுத்த கார் புகைப்படத்தை நயன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











