ஷூட்டிங் ஸ்பாட்டில் காதலியை கட்டியணைத்து பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்த விக்கி... வைரலாகும் போட்டோஸ்!
சென்னை: நடிகை நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது காதலரான விக்னேஷ் சிவன் ஷூட்டிங் ஸ்பாட்டில் கொடுத்த சர்ப்ரைஸ்... போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Recommended Video
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருகிறார். ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் நயன்தாரா, தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் உள்ளார்.
தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார் நயன்தாரா.

விக்கியுடன் காதல்
ஏற்கனவே இரண்டு காதல் தோல்விகளை சந்தித்த நயன்தாரா கடந்த 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடிதான் படத்தில் நடித்தார். அப்போது விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

டேட்டிங் போட்டோக்கள்
இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டனர். அடிக்கடி வெளிநாடுகளில் இருவரும் டேட்டிங் செய்து வந்தனர். இருவரும் வெளிநாடுகளில் டேட்டிங் செய்யும் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்து வந்தது.

விரைவில் திருமணம்
தொடர்ந்து இருவரும் லிவிங் டுகெதரில் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை நயன்தாரா, இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறினார். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

காத்து வாக்குல ரெண்டு காதல்
தற்போது நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கண்மணி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா ஆகியோரும் நடிக்கின்றனர்.

என் எல்லாமே...
இந்நிலையில் நடிகை நயன்தாரா நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் போஸ்டரை வெளியிட்டு கண்மணி தங்கமே.. என் எல்லாமே என சமூக வலைதளத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார் விக்னேஷ் சிவன்.

நயன்தாராவுக்கு சர்ப்ரைஸ்
இதனை தொடர்ந்து காத்து வாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாராவுக்கு சர்ப்ரைஸாக பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார் விக்னேஷ் சிவன். Happy Birthday lady super star என்று எழுதப்பட்ட கேக்கையும் NAYAN என்ற டிசைன் வடிவிலும் வித்தியாசமாக டிசைன் செய்யப்பட்ட கேக் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்து நயன்தாராவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார் விக்கி.

கட்டியணைத்து வாழ்த்து
இதனை ஆச்சரியத்துடன் பார்த்த நடிகை நய்னதாரா தனது காதலரான விக்னேஷ் சிவன் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் படக்குழுவினருக்கு கேக் வெட்டி ஊட்டி விட்டார். இதில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா ஆகியோர் பங்கேற்றனர். மேலும் காதலிக்கு கட்டியணைத்து பிறந்த நாள் வாழ்த்து கூறினார் விக்கி. தனக்கு பிறந்த நாள் சர்ப்ரைஸ் கொடுத்த விக்னேஷ் சிவனை கட்டிப்பிடித்து நன்றி கூறினார் நயன்.


Click it and Unblock the Notifications











