தலைவர் ரசிகர்களுக்கு உற்சாக அனுபவம்... அண்ணாத்த படம் குறித்து விக்னேஷ் சிவன் சிலிர்ப்பு
சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்றைய தினம் தீபாவளி கொண்டாட்டமாக அண்ணாத்த படம் ரிலீசாகியுள்ளது.
முதல் நாளிலேயே ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ற படம் என்ற விமர்சனத்தை பெற்றுள்ளது அண்ணாத்த.
இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவனும் படம் குறித்த தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதிபாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் தீபாவளியையொட்டி நேற்றைய தினம் வெளியாகியுள்ளது அண்ணாத்த. இந்த தீபாவளி அண்ணாத்த தீபாவளி என்னும்படியாக இந்தப் படம் ரிலீசாகியுள்ளது.

ரசிகர்கள் கொண்டாட்டம்
நேற்றைய தினம் படம் ரிலீசாகியுள்ள நிலையில் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். சிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினிகாந்தை ஆக்ஷன், காமெடி, சென்ட்டிமெண்ட் என கலவையாக பார்க்க முடிந்தது. அண்ணன் -தங்கை பாசத்தை மையமாக கொண்டு வெளிவந்துள்ளது படம்.

ஏராளமான ரசிகர்கள்
நேற்றைய தினம் திரையரங்குகளில் ஏராளமான ரசிகர்களை பார்க்க முடிந்தது. தொடர்ந்து தீபாவளியையொட்டி விடுமுறை தினங்களாக வந்துள்ள நிலையில், அடுத்தடுத்த நாட்களிலும் அரங்கு கொள்ளாத காட்சிகள் எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.
Recommended Video

விக்னேஷ் சிவன் பாராட்டு
படம் குறித்து சிறப்பான விமர்சனங்கள் மற்றும் பாராட்டுக்கள் வந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் படம் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார். தலைவர் ரசிகர்களுக்கு உற்சாக அனுபவத்தை படம் தந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சிவாவிற்கு விக்னேஷ் சிவன் பாராட்டு
சிறப்பான மாஸ், காமெடி, ஆக்ஷன் மற்றும் எமோஷன்சை இந்தப் படத்தில் சிறப்பாக இயக்குநர் சிவா கையாண்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், இசையமைப்பாளர் இமான் சிறப்பான பணி புரிந்துள்ளதாகவும் நயன்தாரா எப்போதும் போல சிறப்பான காணப்படுவதாகவும் பாராட்டியுள்ளார். கீர்த்தி சுரேஷ் சிறப்பாக நடித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பான குடும்ப எண்டர்டெயினர்
மேலும் தலைவருடன் குஷ்பூ மற்றும் மீனா உள்ளிட்ட விருப்பத்திற்குரிய நடிகர்களை திரையில் பார்த்ததும் சிறப்பாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மொத்தத்தில் சிறப்பான குடும்ப என்டர்டெயினர் படமாக இந்த தீபாவளியில் அண்ணாத்த படம் அமைந்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











