நேக்கு கல்யாண வயசு வந்துடுத்துடி: நயன்தாராவிடம் ப்ரொபோஸ் செய்த விக்கி

By Siva

Recommended Video

ட்விட்டரில் நயன்தாராவுக்கு ப்ரபோஸ் செய்த விக்னேஷ் சிவன்- வீடியோ

சென்னை: இது தான் சாக்கு என்று விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் ப்ரொபோஸ் செய்துள்ளார்.

நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலிப்பது ஊர் அறிந்த விஷயம். திடீர் திடீர் என்று ஜோடியாக அமெரிக்கா பறந்துவிடுகிறார்கள். அங்கு புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு சிங்கிள்ஸ்களின் சாபத்தை வாங்குகிறார்கள்.

அவர்களின் திருமணம் இந்த ஆண்டு நடக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

கோலமாவு கோகிலா

கோலமாவு கோகிலா

நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்தில் வரும் கல்யாண வயசு பாடல் வீடியோவை நேற்று வெளியிட்டார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி விக்கி நயன்தாராவுக்கு ப்ரொபோஸ் செய்துவிட்டார்.

விக்னேஷ்

நேக்கு கல்யாண வயசுதான் வந்துடுத்து டி , வெயிட் பண்ணவா#kolamaavukokila #nayanthara. சரியான பாடலை அளித்த அனிருத், சிவகார்த்திகேயனுக்கு நன்றி என்று இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

காதல்

காதல்

சிவகார்த்திகேயன் எழுதிய பாடல் வரிகளை வைத்து நயன்தாராவிடம் கட்டிக்கிறியா, இல்லையா என்று கேட்டுள்ளார் விக்னேஷ் சிவன். நயன்தாரா என்ன பதில் அளிக்கப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

யோகி பாபு

யோகி பாபு

கல்யாண வயசு பாட்டில் நயன்தாராவை சைட்டு அடிக்கும் யோகி பாபு மீது கடுப்பில் இருக்கிறார் விக்கி. இது குறித்து அவர் ட்வீட்டியதை பார்த்த சிங்கிள்ஸ் நெட்டிசன்கள் நீங்கள் நயன்தாராவை கரெக்ட் செய்தபோது எங்களுக்கும் இப்படித் தானே இருந்திருக்கும் என்று கமெண்ட் போட்டுள்ளனர்.

கவலை

விக்கியோ நயன்தாராவை திருமணம் செய்ய துடிக்க அஜித் ரசிகர்களோ விஸ்வாசம் ஷூட்டிங் முடியும் வரை காத்திருங்க பாஸ் என்கிறார்கள். அவரவர் கவலை அவரவருக்கு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X