கெடச்சத இழந்த விக்னேஷ் சிவன்.. ஏகே 62 அறிவிப்பு வெளியாகி ஒரு வருஷம் ஆகுது.. டிரெண்டாகும் போஸ்ட்!
சென்னை: கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி இதே நாளில் தான் இயக்குநர் விக்னேஷ் சிவன் தான் அடுத்ததாக அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்கப் போகிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டது.
அஜித் பேங்காக்கில் பைக் டூர் செல்லும் போட்டோவை போட்டு அமைதிக்கு முன் புயல் என்றெல்லாம் பதிவிட்டார்.
ஆனால், அதிரடியாக ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்ட நிலையில், இன்று அதை குறிக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா போஸ்ட் ரசிகர்களை ரொம்பவே ஃபீல் பண்ண வைத்துள்ளது.

அன்பான இயக்குநர்
சிம்புவின் போடா போடி, விஜய்சேதுபதியின் நானும் ரவுடி தான் படங்களை இப்பவும் ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கும் அந்த படத்தில் இடம்பெற்ற சொடக்கு மேல சொடக்கு பாடலுக்கும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கு, கடந்த ஆண்டு வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் வித்தியாசமனா திரைக்கதையுடன் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது. இப்படி ஜாலியான படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்த இயக்குநர் விக்னேஷ் சிவன் இப்படி அப்செட்டாக உள்ளாரே என ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

ஒரு வருஷம் ஆகுது
கடந்த ஆண்டு மார்ச் 18ம் தேதி லைகா நிறுவனம் அஜித்தின் எகே 62 படத்தை இயக்கப் போவது விக்னேஷ் சிவன் தான் என அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தது. இந்நிலையில், ஒரு வருஷம் ஆகியும் இன்னமும் படத்தின் இயக்குநர் யார் என்பது உறுதியாகவில்லை. விக்னேஷ் சிவன் இனி ஏகே 62 படத்தை இயக்கப் போவதில்லை என்கிற தகவல்கள் வெளியான நிலையில், அஜித் ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆனது குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் சிவன் போஸ்ட்
ஏகே 62 படத்தை தான் இனி இயக்கப் போவதில்லை என்பதை தெரிவிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து அஜித் புகைப்படத்தை நீக்கிய விக்னேஷ் சிவன் பயோவில் இருந்தும் ஏகே 62வை நீக்கி அந்த தகவலை உறுதிப்படுத்தினார். இந்நிலையில், ஒரு வருடம் ஆன நிலையில், கெடச்சத இழக்குறதும்.. இழந்தது கெடைக்கிறதும் என்கிற நானும் ரவுடி தான் பாடல் வரிகளை இன்ஸ்டா பக்கத்தில் போட்டு சில வரிகளுக்கு பல அர்த்தங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அப்டேட் கேட்கும் அஜித் ரசிகர்கள்
விக்னேஷ் சிவனின் போஸ்ட் ரசிகர்களை ஒரு பக்கம் ஃபீல் செய்ய வைத்தாலும், அஜித் ரசிகர்கள் நாங்க அவரை விட பாவம்ங்க எங்களுக்கு இன்னும் அஜித் படத்தை மகிழ் திருமேனி தான் இயக்கப் போறாரா என்பதே உறுதியாக தெரியவில்லை என அந்த அப்டேட்டையாவது சொல்லுங்க என லைகாவிடம் அப்டேட் கேட்டு வருகின்றனர்.

குடும்பத்துடன் ஜாலியாக
ஏகே 62 படத்தின் பணிகள் ஒரு பக்கம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் உடன் கால்பந்தாட்ட பயிற்சிகளுக்கு சென்று வரும் புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறார். விரைவில் ஏகே 62 படத்தின் அறிவிப்பு வெளியானால் அஜித் ரசிகர்கள் வேறலெவலில் சோஷியல் மீடியாவையே தெறிக்கவிட காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











