என் தங்கம் இன்னொருவருடன் ஜோடியா நடிக்கிறது பார்த்து.. நயன்தாரா குறித்து விக்கி போஸ்ட்ட பாருங்க!

சென்னை: முதல்முறையாக நயன்தாரா இன்னொருத்தருடன் ஜோடியாக நடிப்பதைப் பார்த்து பொஸ்ஸஸிவ் ஆகவில்லை என்று விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது ஊரறிந்த கதை.

இருவரும் லிவிங் டுகெதரில் வசித்து வருகின்றனர். விக்கியின் நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது.

காத்துவாக்குல ரெண்டு காதல்

காத்துவாக்குல ரெண்டு காதல்

இந்நிலையில் தானா சேர்ந்த கூட்டம், படத்துக்கு பின்னர் பாவகதைகள் என்ற ஆந்தாலஜி படத்தில் பணியாற்றிய விக்னேஷ் சிவன், தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்குகிறார்.

நயன்தாரா சமந்தா

நயன்தாரா சமந்தா

இந்தப் படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடிக்கிறார். அவருடன் சமந்தா, நயன்தாரா ஆகிய இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். நானும் ரவுடிதான் படத்துக்குப் பின்னர் விக்னேஷ் சிவன் - விஜய் சேதுபதி - நயன்தாரா ஆகிய மூன்று பேரும் இணையும் இரண்டாவது படம் இது.

அனிருத் இசை

அனிருத் இசை

இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித்குமார், ரவுடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி ஹைதராபாத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

காதலர் தினத்தில் அப்டேட்

காதலர் தினத்தில் அப்டேட்

தற்போது இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில் காதலர் தினத்தன்று காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் அப்டேட் வர உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விக்கி.

பொஸ்ஸஸிவ் ஆகவில்லை

பொஸ்ஸஸிவ் ஆகவில்லை

அதில் நயன்தாரா இன்னொருவருக்கு ஜோடியாக நடிப்பதைப் பார்த்து முதல்முறையாக பொஸ்ஸஸிவ் ஆகவில்லை என்று பதிவிட்டுள்ளார். மேலும் சமந்தா மிகவும் அற்புதமானவர் என்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் கொண்டாட்டத்தில் உங்களையும் இணைத்துக் கொண்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பவானியை பார்த்து பயமா?

பவானியை பார்த்து பயமா?

இதனை பார்த்த நெட்டிசன்கள் பொஸ்ஸஸிவ் ஆகலையா? பவானியை பார்த்து பயப்படாதீங்க என மாஸ்டர் படத்தில் பவானியாக விஜய் சேதுபதி மிரட்டியதை குறிப்பிட்டுள்ளனர். மேலும் சிலர் உனக்கும் பொஸ்ஸஸிவ்லாம் இருக்கா புரோ என்றும் கேட்டுள்ளனர்.

அடுத்த போஸ்டர்ல இருக்கணும்

அடுத்த போஸ்டர்ல இருக்கணும்

மேலும் சிலர் விஜய் சேதுபதிக்கு மக்கள் செல்வன்னு போட்ருக்கீங்க எங்க தலைவிக்கு ஏன் லேடி சூப்பர் ஸ்டார்னு போடல என்று கேட்டும் சண்டை போட்டுள்ளனர். மேலும் அடுத்த போஸ்டரில் லேடி சூப்பர் ஸ்டார் என்று இருந்தே ஆக வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X