மனசுல இருந்த பாரமே இறங்கிடுச்சு.. விடாமுயற்சி படத்துக்காக விக்னேஷ் சிவன் அந்த ஸ்டோரியை வைத்தாரா?
சென்னை: அஜித் குமாரின் விடாமுயற்சி படத்துக்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களும் ட்ரோல்களும் குவிந்து வரும் நிலையில், விக்னேஷ் சிவன் சூசகமாக பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை ஷேர் செய்து அஜித் ரசிகர்கள் அவரை வெளுத்து வருகின்றனர். விஜய் ரசிகர்கள் அதை ஷேர் செய்து சரியான நேரம் பார்த்து இப்படி முதுகில் குத்துறீங்களே ப்ரோ என்று கலாய்த்து வருகின்றனர்.
லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா நடிப்பில் இன்று வெளியான விடாமுயற்சி திரைப்படம் வெறித்தனம் என அதிகாலையில் அஜித் ரசிகர்கள் விமர்சனங்களை அடுக்கி வந்தனர். ஆனால், படம் தமிழ்நாட்டில் வெளியான நிலையில், இந்த படம் ஆவரேஜ் தான் என்றும் மகிழ் திருமேனி எந்தவொரு கூஸ்பம்ப்ஸ் காட்சிகளையும் வைக்காமல் அஜித் கொடுத்த சிடியை அப்படியே காப்பியடித்து ஒரு படத்தை கொடுத்துள்ளார் என பங்கம் பண்ணி வருகின்றனர்.

அஜித் ரசிகர்கள் தியேட்டர்களில் முதல் நாள் ஓபனிங்கை பிரம்மாண்டமாக நிரப்பிய நிலையில், முதல் நாள் வசூலில் எந்த குறையும் இருக்காது இந்த படம் ஹிட் தான் எனக் கூறி வருகின்றனர்.
விக்னேஷ் சிவன் மீம்ஸ்: விக்னேஷ் சிவன் இந்நேரம் வீட்டில் பார்ட்டி வைத்து ஆட்டம் போட்டுக் கொண்டாடி கொண்டிருப்பார் தானே என ஏகப்பட்ட மீம்களை போட்டு விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்றனர். சவதீகா பாடல் முடிந்த பின்னர் அஜித்தே கடவுளே என கத்திய ரசிகர்கள் எல்லாம் அஜித்தே முடியலை என அதன் பின்னர் கத்த கூட முடியாமல் பின் டிராப் சைலன்ட் ஆகிவிட்டனர் என ட்ரோல்கள் குவிகின்றன.

விக்னேஷ் சிவன் இன்ஸ்டா ஸ்டோரி: சில நேரங்களில், நீங்க வருத்தப்படுவதை நிறுத்தினாலே போதும் என்ன மேஜிக்கை செய்ய வேண்டுமோ இந்த யூனிவர்ஸே அதை உங்களுக்காக நிகழ்த்திவிடும் என விக்னேஷ் சிவன் போட்டுள்ள இன்ஸ்டா ஸ்டோரியை நெட்டிசன்கள் குறிப்பிட்டு விடாமுயற்சி படம் வேலைக்கு ஆகல என்பதை மறைமுகமாக குத்திக்காட்டுகிறாரா விக்னேஷ் சிவன் என்கிற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

மிஸ்ஸான பட வாய்ப்பு: முதலில் ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்குத்தான் கிடைத்தது. ஆனால், சில பல காரணங்களுக்காக அந்த படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டு அதன் பின்னர் தான் மகிழ் திருமேனி அஜித்தின் 62வது படமாக விடாமுயற்சி படத்தை இயக்கினார் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்.


Click it and Unblock the Notifications