ஆண்டவன் தான் உங்கள காப்பாத்தணும், ஒரு ஆணியும் புடுங்க முடியாது: விக்னேஷ் சிவன் கோபம்
சென்னை: இயக்குனர் விக்னேஷ் சிவன் மனமுடைந்து கோபத்தில் உள்ளார்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் மனமுடைந்து போயுள்ளார் என்றதும் அவருக்கும், அவரின் காதலி நயன்தாராவுக்கும் இடையே பிரச்சனை என்று நினைக்க வேண்டாம்.
அவர்களின் காதலில் எந்த பிரச்சனையும் இல்லை. இது கிரிக்கெட் விவகாரம்.
டி 20 அணி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 அணியை பிசிசிஐ அறிவித்தது. அந்த அணியின் கேப்டனாக கோஹ்லியும், துணை கேப்டனாக ரோஹித் சர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அணியில் தோனி இல்லை. இதை பார்த்து தான் விக்னேஷ் சிவன் கோபம் அடைந்துள்ளார்.
விக்னேஷ் சிவன்
பிசிசிஐயின் பட்டியலை பார்த்து விக்னேஷ் சிவன் மனமுடைந்துள்ளார். தலைவன் தோனி இல்லாமல் டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மோசமான செலக்ஷன் கமிட்டி. ஆண்டவன் தான் உங்கள காப்பாத்தணும் பிசிசிஐ. தலைவன் தோனி இல்லாமல் ஆணிய கூட புடுங்க முடியாது மைன்ட் இட் என்று ட்வீட்டியுள்ளார்.

ஏன்?
படம் ரிலீஸானாலும் சில நாட்கள் கழித்து பார்த்துவிட்டு கருத்து தெரிவிக்கிறார். கிரிக்கெட் அணி அறிவிப்பையும் தாமதமாக பார்த்துவிட்டு கருத்து தெரிவித்துள்ளார். இது தான் உங்க டக்கா விக்னேஷ் சிவன்?
தோனி
தோனி அவரின் சீனியர்களுக்கு செய்தது தற்போது அவருக்கு நடக்கிறது என்கிறார்கள் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











