நயன்தாராவுக்குமா?: இது தான் உங்க டக்கா விக்னேஷ் சிவன்?
Recommended Video

சென்னை: எல்லா விஷயத்திலும் இயக்குனர் விக்னேஷ் சிவன் லேட்டாகவே கருத்து தெரிவிக்கிறார்.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் ட்ரெய்லர் நேற்று மதியம் வெளியாகி பட்டையை கிளப்பியுள்ளது. ட்விட்டரில் உலக அளவிலும், தேசிய அளவிலும் முதலிடத்தில் டிரெண்டானது.

ட்ரெய்லரை பார்த்துவிட்டு ட்விட்டரில் பெரிய சண்டையே நடந்து கொண்டிருக்கிறது. இத்தனை களேபரம் நடந்தபோது அமைதியாக இருந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் விஸ்வாசம் ட்ரெய்லர் குறித்து இன்று கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் விஸ்வாசத்திற்கு மட்டும் அல்ல எந்த படமாக இருந்தாலும் லேட்டாக தான் கருத்து தெரிவிக்கிறார். விஸ்வாசம் ட்ரெய்லர் கொல மாஸ் என்று தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.
இது உங்க காதலி நயன்தாரா நடித்துள்ள படம் பாஸ். முதல் ஆளாக நீங்கள் கருத்து தெரிவிப்பீர்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.


Click it and Unblock the Notifications











