எப்பவும் கூடவே இருப்பாரே... நயன்தாராவின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன் மிஸ்சிங்?
சென்னை: நடிகை நயன்தாராவின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இல்லாதது கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் இவர், தெலுங்கு மலையாள படங்களிலும் நடித்துவருகிறார்.
நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து எப்போதும் இணை பிரியாமல் இருக்கத் தொடங்கினர்.

திடீர் விசிட்
அடிக்கடி வெளிநாடுகளுக்கு, கோயில்களுக்கு என்று திடீர் திடீரென விசிட் அடிக்கும் இவர்கள் அங்கிருந்து அசத்தல் புகைப்படங்களை தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டு வருவார்கள்.

திருமணம்
இவர்களுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது என்றும் செய்திகள் வெளியாயின. ஆனால் இருவரும் அதை உறுதிப்படுத்தவில்லை.
கோயில்களில்
சமீபத்தில், மூக்குத்தி அம்மன் படப்பிடிப்புக்காக கன்னியாகுமாரி சென்ற நடிகை நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவனுடன் அங்குள்ள கன்னியாகுமரி அம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், அய்யா கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இந்தப் புகைப்படங்கள் மீடியாகளில் வெளியாயின.

காணவில்லை
இந்நிலையில் கிறிஸ்துமஸ் விழாவை ஒன்றாக கொண்டாடிய இவர்கள், இந்தப் புத்தாண்டை ஒன்றாகக் கொண்டாடவில்லை. நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள புத்தாண்டு கொண்டாட்டப் புகைப்படத்தில் காதலர் விக்னேஷ் சிவனை காணவில்லை. இது இணையவாசிகளை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











