நயன்தாராவுக்கு நடப்பது விக்னேஷ் சிவனுக்கு மட்டும் நடக்க மாட்டேங்குதே
சென்னை: நயன்தாராவுக்கு நடப்பது அவரின் காதலரான விக்னேஷ் சிவனுக்கு இன்னும் நடக்கவில்லை.
கோலிவுட்டின் முன்னணி நடிகையான நயன்தாராவுக்கு பிடித்த நடிகர் என்றால் அது அஜித் என்று பல பேட்டிகளில் அவரே தெரிவித்துள்ளார். அண்மையில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
அவர் தனது கொள்கைகளை தளர்த்தி அஜித் படத்தில் நடித்ததற்கு காரணம் உண்டு என்று கூறப்பட்டது.

விக்னேஷ் சிவன்
நயன்தாரா அஜித்துடன் சேர்ந்து நடிக்க ஆசைப்பட்டால் அது நடக்கிறது. அவரின் காதலரான விக்னேஷ் சிவனுக்கு அஜித்தை வைத்து படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் அது இதுவரை நிறைவேறவில்லை.

நயன்தாரா
விக்னேஷ் சிவனுக்கு கால்ஷீட் வாங்கிக் கொடுக்கும் ஐடியாவில் தான் நயன்தாரா அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் அஜித் அடுத்தடுத்து வேறு இயக்குநர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார்.

பாராட்டு
விக்னேஷ் சிவனின் ஆசை தற்போதைக்கு நிறைவேறுவது போன்று தெரியவில்லை. நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் ஹெச். வினோத் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார். அதன் பிறகு அவரை இயக்க வெங்கட் பிரபு, சிவா என்று இருவர் வெயிட்டிங்கில் உள்ளனர்.

பாராட்டு
இயக்குநர் விக்னேஷ் சிவன் அடுத்த இயக்குநர்களின் படங்களை மனதார பாராட்டுவார். பிற இயக்குநர்களின் படங்களுக்கு சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்வார். அவ்வாறு செய்ய பெரிய மனது வேண்டும். நல்ல மனிதர் தான். ஆனால் அவர் ஆசை எப்பொழுது நிறைவேறும் என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











