அனிருத் முன்பு மண்டியிட்ட விக்னேஷ் சிவன்.. அவர் சொன்ன விஷயம் தான் ஹைலைட்டே.. LIK உசுரே நீதானே!

சென்னை: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் பல ஆண்டுகளாக ஏகப்பட்ட தடைகளை தாண்டி வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக காத்திருக்கிறது. வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் இன்று பிரம்மாண்டமாக அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் நடைபெற உள்ளது. இந்நிலையில், சற்றுமுன் அனிருத் முன்பாக மண்டியிட்டு இருக்கும் போட்டோ ஒன்றை விக்னேஷ் சிவன் ஷேர் செய்துள்ளார்.

சிம்பு, வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் விக்னேஷ் சிவன். அதற்கு முன்னதாக வேலையில்லா பட்டதாரி படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

Vignesh Shivan kneel down before Anirudh and express his heartfelt thanks for LIK music
Photo Credit:

தனுஷ் தயாரிப்பில் நானும் ரவுடி தான் படத்தை இயக்கும் போது நயன்தாராவுடன் காதல் ஏற்பட அவரையே திருமணமும் செய்துக் கொண்டார்.

சொதப்பிய படங்கள்: முதல் படமே விஜய்யின் துப்பாக்கி படத்துடன் வந்து படுதோல்வியை சந்தித்தது என விக்னேஷ் சிவனே சமீபத்திய பேட்டியில் கூறினார். விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த நானும் ரவுடி தான் திரைப்படம் விக்னேஷ் சிவனுக்கு வெற்றிப் படமாக அமைந்தது. சூர்யாவுடன் இணைந்து நடித்த தானா சேர்ந்த கூட்டம் திரைப்படமும் பெரிதாக ஓடவில்லை. மீண்டும் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் கூடுதலாக சமந்தாவை வைத்து இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ஓரளவுக்கு ஓடியது. இந்நிலையில், பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார்.

அனிருத் முன் மண்டியிட்ட விக்னேஷ் சிவன்: நேற்று நடைபெறவிருந்த எல்ஐகே நிகழ்ச்சி மழையின் காரணமாக கடைசி நேரத்தில் ரத்தானது. ஆனால், அனிருத் சொன்னது போல மொத்த பாடல்களையும் ஆன்லைனில் ரிலீஸ் செய்துவிட்டார். மேலும், பின்னணி இசை என மொத்த பணிகளையும் முடித்துக் கொடுத்த நிலையில், அவர் முன்பாக மண்டியிட்டு, இந்த படத்தின் கதை என்னுடையதாக இருந்தாலும் அதன் உயிர் உங்களுடையது தான் அனிருத் என அவரை பாராட்டித் தள்ளியுள்ளார். இந்த படத்தில் அனிருத்தின் குரலும் ரோபோவுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருடைய ஆல்பம் பாடலான "எனக்கென யாருமில்லையே" பாடலும் எல்ஐகே படத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X